\
போலீசாரின் கையை கடித்த இளைஞர்
போலீசாரின் கையை கடித்த இளைஞர் PT WEB

பெங்களூரில் போக்குவரத்துக்கு போலீசாரின் கையை கடித்த இளைஞர்; இணையத்தில் வைரலான வீடியோ!

பெங்களூரில் தனது இருசக்கர வாகனத்தைத் தடுத்து நிறுத்திய போலீசாரின் கையை கடிக்கும் இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரின் மையப் பகுதியில் இன்று மதியம் போக்குவரத்து காவலர்கள் வழக்கமான வாகன சோதனையில் ஈட்டுப்பட்டிருந்தனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த இளைஞரை விதிமீறல் தொடர்பாக போலீசார், புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த இளைஞர் போலீசாரின் கையை பிடித்துக் கடித்துள்ளார்.

இதனையடுத்து பணியில் இருந்த போக்குவரத்து காவலரைத் தாக்கியது, பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அந்த இளைஞரின் வாகனத்தைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com