இந்தியா
27 ஆண்டுகளுக்கு முன் தாய்க்கு நிகழ்ந்த கொடூரம்; தந்தை யார் என கேட்ட மகனுக்கு அதிர்ச்சி!
27 ஆண்டுகளுக்கு முன் தாய்க்கு நிகழ்ந்த கொடூரம்; தந்தை யார் என கேட்ட மகனுக்கு அதிர்ச்சி!
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண்ணை இருவர் கூட்டாக இணைந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தற்போது அந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதற்கு காரணம் என்ன?
இதில் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்யப்பட்ட போது 12 வயது சிறுமியாக இருந்துள்ளார். பாதிக்கப்பட்டவரின் மகன் அவரது தந்தையின் பெயரை அறிய முயன்ற போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் 13 வயது சிறுமியாக இருந்த போது கருவுற்று, குழந்தை ஒன்றையும் ஈன்றுள்ளார். அவரை பலாத்காரம் செய்தது சகோதரர்கள் இருவர் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இருப்பினும் காவல் துறையினர் அவரது புகாரின் மீது கவனம் செலுத்த தவறியதால் நீதிமன்றம் சென்று இதை வழக்காக பதிய செய்துள்ளார் அந்த பெண்.