தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து மீது செருப்பு வீசிய பெண் கைது செய்யப்பட்டார்.
ஹரியானா மாநிலம் ரோத்தக் (Rohtak) மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தீபேந்தர் ஹூடாவை ஆதரித்து பஞ்சாப் மாநில அமைச்சர் நஜ்ஜோத் சிங் சித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது அவருக்கு எதிராகவும் மோடிக்கு ஆதரவாகவும் அங்கு கோஷம் எழுப்பினர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர், தனது செருப்பை சித்து மீது வீசினார். ஆனால், அந்தச் செருப்பு சித்து மீது விழவில்லை. பின்னர் செருப்பு வீசிய பெண்ணை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
சித்து மீது தாக்குதல் நடப்பது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது .