இந்தியா
ராணுவ வீரர்களுக்காக பிரம்மாண்ட விநாயகர் சிலை வாங்கிய பெண்
ராணுவ வீரர்களுக்காக பிரம்மாண்ட விநாயகர் சிலை வாங்கிய பெண்
எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்காக மும்பையில் இருந்து பிரமாண்ட விநாயகர் சிலைகளை பெண் ஒருவர் வாங்கியுள்ளார்.
வரும் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தைச் சேர்ந்த கிரண் இஷ்ஹெர் என்பவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியை தனது சொந்த ஊரான பூன்ச் மாவட்டத்தில் கொண்டாடும் விதமாக மும்பையில் இருந்து மூன்று விநாயகர் சிலைகளை வாங்கியுள்ளார்.
அதில் 6.5 அடி உயரம் கொண்ட ஒரு சிலையை மட்டும் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் வீரர்கள் பிரார்த்தனை செய்வதற்காக வாங்கியுள்ளார். எல்லையில் உள்ள ராணுவ வீரர்களும் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த சேவையை கிரண் இஷ்ஹெர் செய்துவருகிறார்.