ராவணன்
ராவணன்web

ராவணனை மருமகனாக கொண்டாடும் கிராம மக்கள்.. தசரா பண்டிகையில் சிறப்பு வழிபாடு!

மத்திய பிரதேசத்தில் ராவணனை மருமகனாக கிராம மக்கள் கொண்டாடுவது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
Published on
Summary

மத்திய பிரதேசத்தில் ராவணனை மருமகனாக கிராம மக்கள் கொண்டாடுவது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

தசரா பண்டிகையின்போது வடமாநிலங்களில் ராவணன் உருவப் பொம்மையை எரிக்கப்படும் நிகழ்வுகளை பார்த்திருப்போம். ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தில் கான்புரா என்னும் சிற்றூர் மக்கள் தசரா பண்டிகை அன்று ராவணனை வழிபடுகிறார்கள்.

ராவணனை மருமகனாக கொண்டாடும் சிற்றூர்..

ராவணனின் மனைவி மண்டோதரி இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், ராவணன் தங்கள் ஊரின் மருமகன் என்றும், இந்த ஊரில் உள்ள நாம்தேவ் வைஷ்ணவ் சமூகத்தினர் நம்புகிறார்கள்.

300 ஆண்டுகள் பழமையான 51 அடி உயர ராவணன் சிலை அங்கு உள்ளது. தசரா பண்டிகையான விஜயதசமி அன்று, மக்கள் நோய் நீங்க வேண்டி சிலையின் கால்களில் சிவப்பு நூலைக் கட்டி, பாரம்பரிய உணவுகளான லட்டு மற்றும் ‘தால் பாஃப்லா’ ஆகியவற்றைச் சமர்ப்பித்து வழிபடுகின்றனர்.

ராவணனை, அறிவு, பக்தி மற்றும் குடும்ப உறவின் அடையாளமாகக் கொண்டாடுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com