நாளை வரும் முழு சந்திர கிரகணத்தை, இந்தியாவில் இந்த நேரங்கள்ல தான் பார்க்க முடியுமாம்!

நாளை வரும் முழு சந்திர கிரகணத்தை, இந்தியாவில் இந்த நேரங்கள்ல தான் பார்க்க முடியுமாம்!
நாளை வரும் முழு சந்திர கிரகணத்தை, இந்தியாவில் இந்த நேரங்கள்ல தான் பார்க்க முடியுமாம்!

நாளை (நவ.8) முழு சந்திர கிரகண நிகழ்வு நிகழ உள்ளது. இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இந்த நிகழ்வைக் காண முடியும்.

இந்தியாவில் நாளை (நவ.8) முழு சந்திர கிரகணம் நிகழும். சந்திரன் உதிக்கும் நேரத்தில் இந்தியாவின் அனைத்து இடங்களிலிருந்தும் கிரகணம் தெரியும். இருப்பினும், கிரகணத்தின் ஆரம்பம் மற்றும் அதனோடு தொடர்புடைய பல்வேறு வடிவ நிலைகளை இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தும் காண இயலாது. ஏனெனில் சந்திர உதயத்திற்கு முன்பாகவே மொத்த நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கும். முழு மற்றும் பல்வேறு பகுதி வடிவ நிலைகளின் முடிவு நாட்டின் கிழக்குப் பகுதிகளிலிருந்து காண முடியும்.

நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து பகுதி வடிவ நிலைகளின் முடிவு மட்டுமே தெரியும். இந்த கிரகணம் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில் தெரியும்.

இந்திய நேரப்படி மதியம் 2:39-க்கு கிரகணம் தொடங்கும். முழு கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 3:46-க்கு தொடங்கும். இந்திய நேரப்படி முழு கிரகணத்தின் முடிவு நேரம் மாலை 5:12 மற்றும் பகுதி வடிவ நிலைகளின் முடிவு நேரம் மாலை 6:19. கொல்கத்தா மற்றும் கவுகாத்தி போன்ற நாட்டின் கிழக்குப் பகுதிகளில் உள்ள நகரங்களில், சந்திரன் உதயத்தின் போது, முழு கிரகணத்தின் பல்வேறு  வடிவ நிலைகள் நடைபெற்று கொண்டிருக்கும். கொல்கத்தாவை பொறுத்தவரை, சந்திரன் உதிக்கும் நேரத்தில் இருந்து இறுதி வரையிலான மொத்த கால அளவு 20 நிமிடம் மற்றும் சந்திர உதய நேரம் முதல் பகுதி கிரகணம் முடியும் வரை 1 மணி 27 நிமிடம் ஆகும்.

கவுகாத்தியைப் பொறுத்தவரை, சந்திரன் உதிக்கும் நேரத்திலிருந்து இறுதி வரையிலான மொத்த கால அளவு 38 நிமிடங்களாகவும், சந்திர உதயம் முதல் பகுதி கிரகணம் முடியும் வரை 1 மணி 45 நிமிடங்களாகவும் இருக்கும். டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு போன்ற பிற நகரங்களில், சந்திரன் உதயத்தின் போது, முழுமையும் முடிந்த பிறகு பகுதி கிரகணம் நடந்து கொண்டிருக்கும். மேற்குறிப்பிட்ட நகரங்களில், சந்திரன் உதிக்கும் நேரம் முதல் பகுதி கிரகணம் முடியும் வரை முறையே 50 நிமிடம், 18 நிமிடம், 40 நிமிடம் மற்றும் 29 நிமிடம் இருக்கும். இந்தியாவில் இருந்து அடுத்த சந்திர கிரகணம் அக்டோபர் 28, 2023 அன்று பார்க்க முடியும். மேலும் அது ஒரு பகுதி கிரகணம் ஆகும்.

இந்தியாவில் இருந்து கடைசியாக காணப்பட்ட சந்திர கிரகணம் நவம்பர் 19, 2021 அன்று ஆகும். அது ஒரு பகுதி கிரகணம் ஆகும். சந்திர கிரகணம் முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது ஏற்படும். முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் ஏற்படும். தமிழ்நாட்டின் சென்னையில், சந்திரன் உதிக்கும் நேரம் இந்திய நேரப்படி 17 மணி 39 நிமிடங்கள் என்றும் சந்திர கிரகணத்தை 40 நிமிடங்கள் காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சந்திர கிரகணம் நிகழவுள்ளதால் காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை 11 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான கதவுகள் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் அந்த நேரத்துக்கான இலவச தரிசனம் கோயிலில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல இந்தியாவின் பல பகுதிகளிலுள்ள கோயில்களில் நடைசாத்தப்படுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com