இத்தனை காரணங்கள்; இத்தனை கதைகளா! 15 மாநிலங்கள்..10 நாடுகள்..தீபாவளி கொண்டாடப்படும் முறைகள்- தொகுப்பு

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. இங்கெல்லாம் தீபாவளி கொண்டாடப்படும் முறைகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.
தீபாவளி
தீபாவளிweb

தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாளே, தீபாவளி என அழைக்கப்படுகிறது. இந்த நன்னாள், இன்று (நவ. 12) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தென் இந்தியாவில் நரகாசுரனை அழித்ததால் கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி விளங்கினாலும், வடமாநிலங்களில் ராவணனை வதம் செய்துவிட்டு ராமரின் வெற்றியை நினைவுபடுத்தும் விதமாகக் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி
தீபாவளி

தீபாவளி இந்தியாவைத் தவிர்த்து நேபாளம், இலங்கை, மியான்மர், மொரிஷியஸ், மலேசியா, சிங்கப்பூர், பாகிஸ்தான், பிஜி போன்ற நாடுகளில் கொண்டாடப்படுகிறது. அதுபோல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. இங்கெல்லாம் தீபாவளி கொண்டாடப்படும் முறைகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

மாநிலங்களில் கொண்டாடப்படும் தீபாவளி

1. ஆந்திரப்பிரதேசம்

ஆந்திராவில் தீபாவளியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுகின்றனர். ஐதராபாத்தில், தீபாவளி தினத்தன்று எருமை மாட்டை குளிப்பாட்டும் ஒரு தனித்துவமான பாரம்பரியத்தை மக்கள் பின்பற்றுகின்றனர். ஆந்திராவில், 'தீபாவளி' என்ற கிராமம் ஆண்டுதோறும் தீபாவளியன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதற்கென ஒரு கதை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆந்திரா
ஆந்திரா

2. அசாம்

அசாமில், தீபாவளி தினத்தன்று லட்சுமி தேவியை வழிபடுகின்றனர். மக்கள் ரங்கோலி வரைந்து சோப்தா பூஜை செய்கிறார்கள். மேலும், தீபாவளியன்று புதிய வேலை மற்றும் செயல்களை மங்களகரமானதாகக் கருதி தொடங்குகின்றனர்.

பீகார்
பீகார்

3. பீகார்

பீகாரில், மக்கள் தந்தேராவை முன்னிட்டு புதிய பாத்திரங்களை வாங்கி வழிபடும் இடத்தில் வைக்கிறார்கள். அவர்கள் அதிகாலையில் கங்கையின் புனித நீரில் நீராடி, விரதமிருக்கிறார்கள். தீபாவளிக்கு ஒருநாள் முன்னதாக மக்கள் மாலையில் லட்சுமி பூஜை செய்கிறார்கள்.

4. ஜம்மு - காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரில் தீபாவளி அன்று, புதிய பொருட்களை வாங்கி மகிழ்கின்றனர். மக்கள் அதிகாலையில் எழுந்து சடங்குகளுடன் நண்பர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளை வழங்குகின்றனர். அகல் விளக்குகளை ஏற்றி கோயில்கள், மாட்டுத் தொழுவங்கள், வாசல் முற்றத்தில் வைத்து வழிபடுகின்றனர்.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்

5. பஞ்சாப்

பஞ்சாப்பில் குரு ஹர்கோவிந்த் சிங் ஜியின் நினைவு நாளையும் சேர்த்துக் கொண்டாடுகின்றனர். அந்நாளில் தீபங்கள் ஏற்றி வழிபடுகின்றனர். தீபத் திருநாளில், முழு பொற்கோயிலும் தீபங்களால் அலங்கரிக்கப்படுகிறது.

பஞ்சாப்
பஞ்சாப்

6. ராஜஸ்தான்

தீபாவளி அன்று, ராஜஸ்தான் மக்கள், புத்தாடை அணிந்து லட்சுமி பூஜை செய்து தீபாவளியைக் கொண்டாடுகின்றர். இந்நாளில் ராஜஸ்தானி இனிப்புகளான டில் கே லடூ, பிஸ்தே கி லாஞ்ச், மோதி பாக், கோண்ட் கே லடூ, ஃபீனி, சோஹன் பப்டி போன்றவற்றைத் தயாரித்து மகிழ்கின்றனர். பின்னர், இதை மாலையில் குடும்பத்தினருடன் அமர்ந்து உண்கின்றனர்.

7. ஹிமாச்சல் பிரதேசம்

ஹிமாச்சலில் தீபாவளியன்று, இளையவர்கள் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களிடம் ராமாயணக் கதை கேட்டு மகிழ்கின்றனர். அன்றைய நாளில் அவுலோஸ் மற்றும் இனிப்புகளுடன் தீபாவளியைப் பிறருடன் கொண்டாடி மகிழ்கின்றனர். தீபாவளியன்று இளைஞர்கள் வயதானவர்களிடம் ஆசி பெறுவதும் வழக்கமாக உள்ளது.

ஹிமாச்சல்
ஹிமாச்சல்

8. தமிழ்நாடு

தமிழகத்தில் பாரம்பரிய எண்ணெய்க் குளியல் மூலம் தொடங்கி, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்பு மற்றும் பலகாரங்களுடன் விளக்கேற்றி வைத்து வழிபட்டு, தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். அதை நண்பர் மற்றும் உறவினர்களுக்கு வழங்கி மகிழ்கின்றனர்.

மேற்கு வங்கம்
மேற்கு வங்கம்

9. மேற்கு வங்காளம்

மேற்கு வங்கத்தில் தீபாவளியின்போது, மக்கள் வீட்டு வாசலில் ரங்கோலி போட்டு அலங்கரிக்கின்றனர். வீடுகளில் தீபங்கள் ஏற்றப்படுகிறது. இம்மாநிலத்தில், மக்கள் தீபாவளியை மூன்று நாட்கள் கொண்டாடுகிறார்கள். மூன்றாவது நாளில், மக்கள் காளி தேவியை வணங்கி மகிழ்கின்றனர்.

10. ஒடிசா

ஒடிசாவில் தீபாவளியன்று, மக்கள் உயரமான மூங்கில்களை தன் வீட்டு முன் வைக்கிறார்கள். அதில் கயிற்றால் மண் பானைகளைக் கட்டி, அப்பானையின் உள்ளே அகல் விளக்குகளை ஏற்றிவைத்து கொண்டாடுகின்றனர். ஒடிசாவிலுள்ள சில கிராமங்களில் மக்கள் தீபாவளித் திருநாளன்று தங்கள் முன்னோர்களின் ஆன்மாவை சொர்க்கத்திற்கு வழியனுப்பும் நாளாகக் கருதி கொண்டாடுகின்றனர்.

ஒடிசா
ஒடிசா

11. குஜராத்

குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரையில், தீபாவளித் திருநாளை புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். அன்றைய நாளில் புதிய சொத்துகள் வாங்குவது, புதிய தொழில்கள் தொடங்குவது, அலுவலகங்கள் மற்றும் கடைகள் திறப்பது, திருமணம் செய்வது என நல்ல காரியங்களை செய்வதற்கு உகந்த நாளாக கருதுகின்றனர். மேலும் தீபாவளி நாளன்று இரவில் மாநிலம் முழுவதும் தியா என்ற பெயரில் விளக்குகளை ஏற்றி வைத்து வணங்குகின்றனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா

12. மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் தீபாவளிப் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாளன்று பசுவழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மூன்றாம் நாளான தீபாவளித் திருநாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்து, பின்பு புத்தாடைகளை அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கின்றனர். நான்காவது நாளான லட்சுமி பூஜையன்று ஒவ்வொரு வீட்டிலும் பணம் மற்றும் நகைகளை லட்சுமி தேவியாக பாவித்து வணங்குகின்றனர்.

13. கர்நாடகா

கர்நாடகாவில், தீபாவளிப் பண்டிகை மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு முந்தைய நாளான அஸ்விஜா கிருஷ்ண சதுர்த்தசி அன்றே மக்கள் எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்து புத்தாடை அணிந்து தீபாவளியை கொண்டாடுகின்றனர். தீபாவளி முடிந்த மறுநாள் அன்று பாலிபத்யாமி என்று கொண்டாடுகின்றனர்.

கர்நாடகா
கர்நாடகா

14. தெலங்கானா

தெலங்கானாவின் கரீம்நகரில் உள்ள கர்கனகட்டா பகுதியில் உள்ள மயானத்தில் அனைத்து வயதினரும், புத்தாடை அணிந்து, மெழுகுவர்த்தி ஏற்றி, பட்டாசுகள் வெடித்து மூதாதையர்களுக்கு அஞ்சலி செலுத்தி வழிபடுகின்றனர். இதையொட்டி, மயானம் வர்ணம் பூசப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசம்

15. உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசத்தில் தீபாவளி 5 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீடுகள் மற்றும் தெருக்கள் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. தீபாவளியன்று, மக்கள் புனித கங்கையில் நீராடி, புத்தாடை அணிந்து இனிப்புகளுடன் விநாயகர் மற்றும் லட்சுமி தேவியை வணங்குகின்றனர். அன்று மாலை கங்கைக்கரையில் ஆரத்தி செய்த தீபங்களை ஆற்றில் மிதக்க விடுகின்றனர். அயோத்தி மற்றும் வாரணாசியில் தீபாவளி வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

பிற நாடுகளில் கொண்டாடப்படும் தீபாவளி

1. சிங்கப்பூர்

சிங்கப்பூரின் ’லிட்டில் இந்தியா’ பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்குவதால், அப்பகுதி வண்ணவிளக்குகளால் பிரகாசிக்கிறது. தசராவும், அதுனைத் தொடர்ந்து வரும் தீபாவளியும் அதிக மக்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

2. மலேசியா

மலேசியாவில் ’ஹரி தீபாவளி’ என்ற பெயரில் சிறிது வித்தியாசமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இருப்பினும் மக்கள் காலையில் எண்ணெய்க் குளியலுடன் நாளை தொடங்குகின்றனர். பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

சிங்கப்பூர்
சிங்கப்பூர்

3. இந்தோனேசியா

இந்தோனேசியாவில் தீபாவளியன்று இரவு நேரங்களில் விளக்குகள் ஏற்றியும், பட்டாசுகள், வாணவேடிக்கை வெடித்தும் மக்கள் கொண்டாடுகின்றனர்.

4. மொரீசியசியஸ்

மொரீசியஸில் வசிப்பவர்களில் 50 சதவீதம் பேர் இந்துக்கள் என்பதால் தீபாவளி அதிக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. அங்கு தீபாவளியன்று பொது விடுமுறையும் விடப்படுகிறது.

5. நேபாளம்

நேபாளத்தில் தசைன் பண்டிகைக்கு பிறகு மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி உள்ளது. லட்சுமி பூஜைகளும் நடத்தப்படுகிறது.

6. இலங்கை

இலங்கையில் தீபாவளிக்கென பிரத்யேக இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

7. கனடா

கனடாவில் அதிக அளவில் பஞ்சாப் மக்கள் வசிக்கிப்பதால் இங்கு 3வது அதிகாரப்பூர்வமாக மொழியாக பஞ்சாபி உள்ளது. இதனால் தீபாவளி ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டுகிறது.

8. இங்கிலாந்து

இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் மற்றும் லிசெஸ்வர் பகுதியில் இந்தியர்கள் அதிகம் வசிப்பதால் பிரம்மாண்டமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

கனடா
கனடா

9. டிரினிடாட்

டிரினிடாட் மற்றும் டொபாகோ தீவுகளில் தீபாவளியை மக்கள் இந்தியாவைப் போன்று கொண்டாடுகிறார்கள். கரீபியன் தீவுகளில் ராமாயண காட்சிகள் காட்சிபடுத்தப்பட்டு, முக்கிய அம்சமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

10. நியூசிலாந்து

நியூசிலாந்தின் ஆக்லாந்து, அமெரிக்காவின் சான் ஆன்டானியோ பகுதிகளிலும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே தீபாவளி பண்டிகையை மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com