\
“மறைந்துபோன சுஷ்மா சுவராஜுக்கு சிலை வைக்கப்படும்” - மத்தியப் பிரதேச முதல்வர்

“மறைந்துபோன சுஷ்மா சுவராஜுக்கு சிலை வைக்கப்படும்” - மத்தியப் பிரதேச முதல்வர்

“மறைந்துபோன சுஷ்மா சுவராஜுக்கு சிலை வைக்கப்படும்” - மத்தியப் பிரதேச முதல்வர்
Published on

கடந்த 2019-இல் மறைந்துபோன பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா சுவராஜுக்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிலை வைக்கப்படும் என அவரது பிறந்த நாளன்று உறுதி கொடுத்துள்ளார் மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான். சுஷ்மா சுவராஜ் சிலை அந்த மாநிலத்தில் உள்ள விதிஷா நகரப்பகுதியில் வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2009 மற்றும் 2014 மக்களவை தேர்தலில் இந்த விதிஷா தொகுதியில் இருந்துதான் மக்களவை உறுப்பினராக சுஷ்மா தேர்வாகியிருந்தார். “இந்த நகரின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் சுஷ்மா. அவரது நினைவாக இங்குள்ள டவுன் ஹால் பகுதியில் அவருக்கு சிலை நிறுவப்படும்” என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று நடைபெற்ற சுஷ்மாவின் பிறந்தநாள் விழாவின்போது தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் சுஷ்மாவை நினைவுகூர்ந்து சமூக வலைத்தளத்தில் போஸ்ட் செய்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com