உம்மன்சாண்டி மீதான பாலியல் வழக்கு : விசாரிப்பதற்கு தனிப்படை அமைப்பு

உம்மன்சாண்டி மீதான பாலியல் வழக்கு : விசாரிப்பதற்கு தனிப்படை அமைப்பு

உம்மன்சாண்டி மீதான பாலியல் வழக்கு : விசாரிப்பதற்கு தனிப்படை அமைப்பு

உம்மன்சாண்டி மீதான பாலியல் புகாரை விசாரிப்பதற்கு சிறப்பு புலனாய்வு தனிப்படைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக கேரள டிஜிபி லோக்நாத் பெஹாரா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது பெரியளவில் அரசியல் சர்ச்சை ஏற்படுத்திய விவகாரம் சோலார் பேனல் ஊழல். இந்த விவகாரத்தில் சரிதா நாயர், பிஜூ ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக அவர்களிடம் லஞ்சம் பெற்றதாக அப்போதைய கேரள முதல்வர் உம்மன்சாண்டி மீது குற்றம்சாட்டப்பட்டது. 

பின்னர் இதுதொடர்பாக 2013ஆம் ஆண்டு நீதிபதி சிவராஜன் தலைமையில் விசாரணைக் ஆணையம் அமைத்து உம்மன்சாண்டி தலைமையிலான கேரள அரசு உத்தரவிட்டது. இந்த விசாரணை ஆணையம் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசிடம் கடந்த ஆண்டு செப்டம்பம் மாதம் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் சரிதா நாயருக்கு உம்மன்சாண்டி மற்றும் அவரது உதவியளார் உதவிகள் செய்ததாகவும், அதற்காக சரிதாவை பாலியல் ரீதியதாக பயன்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்தது.

இதற்கிடையே முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி மற்றும் காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் மீது சரிதா நாயர் பாலியல் புகார் அளித்தார். அதில் கடந்த 2012ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான க்லிஃப் இல்லத்தில் உம்மாண்டி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். அதேபோன்று, அப்போதைய அமைச்சர் அனில்குமாரின் அதிகாரப்பூர்வமான ரோஸ் இல்லத்தில் தற்போதைய எம்.பி வேணுகோபல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக தற்போது உம்மன்சாண்டி மற்றும் வேணுகோபால் மீது கேரள குற்றவழக்கு காவல்துறையினர் பாலியல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள கேரள டிஜிபி, “சரிதா நாயர் அளித்த புகாரின் பேரில் தான் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. சட்டம் தன் கடமையை செய்கிறது” என்று கூறியுள்ளார். அதேசமயம் சபரிமலை விவகாரத்தை திசை திருப்பவே தன் மீது திடீரென வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக உம்மன்சாண்டி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com