தெருநாய்கள் விவகாரம்
தெருநாய்கள் விவகாரம்web

முக்கியத்துவம் பெறும் தெருநாய்கள் விவகாரம்.. தூசுதட்டப்படும் 2018-ம் ஆண்டு வழக்கு!

தெருநாய்கள் கருத்தடை செய்யப்பட்டு காப்பகங்களில் அடைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் பல்வேறு எதிர்கருத்துகள் குவிந்த நிலையில், விசாரணைக்காக தனி அமர்வை ஒதுக்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
Published on

நாடு முழுவதும் சமீப வருடங்களாக தெருநாய் எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதோடு, மனிதர்களை தெரு நாய்கள் தாக்குவதும், அதனால் ராபிஸ் நோய் ஏற்பட்டு மனிதர்கள் உயிரிழப்பதும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களுக்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது நினைவிருக்கலாம்!

தூசுதட்டப்படும் 2018 வழக்கு..

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இதே போன்ற ஒரு வழக்கில் முக்கியமான முறையீடு நிகழ்ந்தது, அதில் 2018ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல அமைப்பு ஒன்று பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் 2023-ம் ஆண்டில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கும் ராபிஸ் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் அரசு எடுத்துள்ள முயற்சிகள் திருப்தி அளிப்பதாக கூறி டெல்லி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்திருந்தது. 

தெருநாய்கள் காப்பகத்தை அதிகரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தெருநாய்கள் காப்பகத்தை அதிகரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவுweb

ஆனால் டெல்லி உயர்நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து 2024 ஜூலை மாதம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல அமைப்பு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில், ஜூலை மாதத்திற்கு பிறகு இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெறவில்லை.

இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணையை விரைந்து பட்டியல வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வில் இன்று முறையீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மனுவை விரைந்து விசாரணைக்கு பட்டியல பரிசீலிக்கிறேன் என உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உறுதியளித்துள்ளார்.

விசாரணைக்காக தனி அமர்வு..

டெல்லி தெருநாய்கள் தொடர்பான வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, ஆகஸ்ட் 11ஆம் தேதி தெரு நாய்களை நியமிக்கப்பட்ட காப்பகங்களுக்கு மாற்ற உத்தரவிட்டது.

இந்நிலையில் தற்போது இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி-என்சிஆரின் தெருநாய் எண்ணிக்கையை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்த வளர்ந்து வரும் சட்ட சிக்கல்கள், பொது விவாதம் மற்றும் முரண்பட்ட நீதித்துறை உத்தரவுகளுக்கு மத்தியில் இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தெருநாய்கள்
தெருநாய்கள்pt web

ஆகஸ்ட் 11 ஆம் தேதி, நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, டெல்லி-என்சிஆரில் உள்ள நகராட்சி அதிகாரிகளுக்கு எட்டு வாரங்களுக்குள் அனைத்து பகுதிகளிலிருந்தும் தெருநாய்களை அகற்றி, பிரத்யேக காப்பகங்களில் வைக்க உத்தரவிட்டது.

இருப்பினும், நீதிமன்றத்தின் வெவ்வேறு அமர்வுகள் பிறப்பித்த முரண்பாடான உத்தரவுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்த வழக்கு இப்போது நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் வரவுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com