415 KM பயணித்து 205 கிலோ வெங்காயத்தை விற்கச் சென்ற விவசாயிக்கு கிடைத்த ரூ.8.36.. எங்கே?

415 KM பயணித்து 205 கிலோ வெங்காயத்தை விற்கச் சென்ற விவசாயிக்கு கிடைத்த ரூ.8.36.. எங்கே?
415 KM பயணித்து 205 கிலோ வெங்காயத்தை விற்கச் சென்ற விவசாயிக்கு கிடைத்த ரூ.8.36.. எங்கே?

சாமானிய மக்கள் ஒரு கிலோ வெங்காயத்தை 30 ரூபாய் முதல் விலை கொடுத்து வாங்கி வரும் அதே வேளையில், அதனை விளைவித்த விவசாயிக்கு 8 ரூபாய் 36 பைசாவே கிடைத்திருக்கிறது. அதுவும் 205 கிலோ வெங்காயத்துக்கு. இது தொடர்பான ரசீதுதான் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பலரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

கர்நாடகாவின் திம்மப்புர் என்ற கிராமத்தில் இருந்து பெங்களூருவில் உள்ள யஷ்வந்த்புர் சந்தையில் தான் விளைவித்த 205 கிலோ வெங்காயத்தை விற்பதற்காக கிட்டத்தட்ட 415 கிலோ மீட்டர் தொலைவு பயணித்துச் சென்ற விவசாயிக்கு கிடைத்திருக்கும் பணம் என்னவோ வெறும் 8.36 ரூபாய் மட்டுமே.

கடக் மாவட்டத்தில் இருந்து 415 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சந்தையில் வெங்காயத்தை விற்கச் சென்றிருக்கிறார்கள் சுமார் 50 விவசாயிகள். கொள்முதல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட ரசீதில் போர்ட்டர் கட்டணம் 24 ரூபாய், சரக்கு போக்குவரத்துக்கான கட்டணம் 377 ரூபாய் 64 பைசா போக வெறும் 8 ரூபாய் 36 பைசாவே கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால் கடும் மனவேதனை அடைந்த விவசாயி ஒருவர அதனை பொதுவெளியில் தெரியப்படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவிடவே அந்த பதிவு தற்போது வட்டமடித்து வருகிறது. இது குறித்து பேசியுள்ள விவசாயிகள் சில நாட்களுக்கு முன்பு குவின்டாலுக்கு 500 ரூபாயாக இருந்தது தற்போது 200 ரூபாயாக குறைத்துவிட்டார்கள்.

“தமிழ்நாடு, புனேவில் இருந்து கொண்டுவரப்படும் விளைச்சல் பொருட்களுக்கு யஷ்வந்த்புர் மார்க்கெட்டில் நல்ல விலை கொடுக்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு இந்த சொற்ப விலையே கிடைக்கும் என எதிர்ப்பார்த்திருக்கவில்லை” என்றிருக்கிறார் பாவடெப்பா என்ற விவசாயி.

This is how The double engine Govt of @narendramodi & @BSBommai doubling the income of farmers (Adani)

Gadag farmer travels 415 km to Bengaluru to sell onions, gets Rs 8.36 for 205 kg! pic.twitter.com/NmmdQhAJhv
— Arjun (@arjundsage1) November 28, 2022

தொடர்ந்து பேசியுள்ள அவர், “யஷ்வந்த்புர் மார்க்கெட்டில் விற்க முன்வர வேண்டாம் என சக வசாயிகளுக்கு உணர்த்தவே இந்த ரசீதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தேன். இங்கே வந்து வெங்காயத்தை விற்பதற்காக 25,000 ரூபாய் செலவிட்டிருக்கிறேன்.” என்றும் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து பேசியுள்ள கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத் தலைவர் யல்லப்பா பாப்ரி, “விளைச்சலுக்கான குறைந்தளவு ஆதார விலையை மாநில அரசு நிர்ணயிக்காவிட்டால் வருகிற டிசம்பர் முதல் வார வாக்கில் போராட்டத்தை முன்னெடுப்போம். ஏனெனில், தொடர் மழை காரணமாக ஏற்கெனவே விவசாயிகள் கடுமையான நஷ்டத்தையே சந்தித்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

A farmer travels 415 km to sell his 205 kg #onions, he gets Rs 8.36 Paisa in his hands. The money realized by this farmer will not cover the travel expense back to his home. What options does he have ? How will he feed his family, take are of his parents, pay school fee @PMOIndia pic.twitter.com/fxt0ItowJk
— Ramandeep Singh Mann (@ramanmann1974) November 29, 2022

இதனிடையே சமூக வலைதளத்தில் பரவிய வெங்காயத்துக்கான கொள்முதல் விலை குறித்த ரசீதை பகிர்ந்த நெட்டிசன்கள், “வெறும் 8 ரூபாய் மட்டும் கொடுத்தால் விவசாயிகளின் குடும்பத்தினர் எப்படி வாழ்வார்கள்? இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பது?” என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com