\
பி.டெக் படிக்க விரும்பிய ஒடிசா ஏழை மாணவி: நேரில் சென்று நிதி வழங்கிய செந்தில்குமார் எம்.பி

பி.டெக் படிக்க விரும்பிய ஒடிசா ஏழை மாணவி: நேரில் சென்று நிதி வழங்கிய செந்தில்குமார் எம்.பி

பி.டெக் படிக்க விரும்பிய ஒடிசா ஏழை மாணவி: நேரில் சென்று நிதி வழங்கிய செந்தில்குமார் எம்.பி
Published on

பி.டெக் படிக்க விரும்பிய ஒடிசா ஏழை மாணவிக்கு தருமபுரி எம்.பி நேரில் சென்று நிதி உதவி வழங்கி உள்ளார்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கூலி வேலை செய்து டிப்ளமோ படித்த தனக்கு பிடெக் படிக்க ஆசை என்றும் அதற்கு உதவி செய்வேண்டும் எனவும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி ருசுபோடா கோரியிருந்தார்.

இதைக்கண்ட தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், மாணவியின் சொந்த ஊருக்குச் சென்று 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும், மாணவியின் மேற்படிப்புக்காக வங்கி மூலம் கடன் பெற ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

திமுக மக்களவை உறுப்பினரான செந்தில்குமார் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். சமூக வலைத்தளம் மூலம் தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com