ஹைதராபாத் : தனது உணவை ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுத்து பசி போக்கிய காவலர்!
ஹைதராபாத் : தனது உணவை ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுத்து பசி போக்கிய காவலர்!
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து வருகிறது இந்தியா. மருத்துவ கட்டமைப்புகளில் பற்றாக்குறை தொடங்கி ஆக்ஸிஜன், தடுப்பு மருந்து என அனைத்திலும் பற்றாக்குறை என்பது நீடித்துக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் பசியுடன் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஹைதராபாத் நகரத்தில் பணியில் பிஸியாக இருந்த காவலர் ஒருவர் தனது உணவை ஆதரவற்ற இரண்டு குழந்தைகளுக்கு கொடுத்து பசி போக்கியுள்ளார்.
அவரது உயர்ந்த உள்ளத்தை நெட்டிசன்கள் ட்விட்டரில் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவம் ஹைதராபாத் பஞ்சகுட்டா பகுதியில் நிகழ்ந்துள்ளது. தனது உணவை அந்த குழந்தைகளுக்கு கொடுத்து பசி பிணி போக்கியுள்ளார் காவலர் மகேஷ். அந்த காட்சியை வீடியோவாக தெலுங்கானா போலீசார் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.