\
சிறுத்தையிடம் இருந்து எஜமானரைக் காப்பாற்றிய ’டைகர்’!

சிறுத்தையிடம் இருந்து எஜமானரைக் காப்பாற்றிய ’டைகர்’!

சிறுத்தையிடம் இருந்து எஜமானரைக் காப்பாற்றிய ’டைகர்’!
Published on: 

தனது எஜமானரைத் தாக்கிய சிறுத்தையை விரட்டி விரட்டித் துரத்திய, செல்ல நாயான டைகருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

டார்ஜிலிங்கைச் சேர்ந்தவர் அருணா லமா. இவர் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். செல்ல நாயான அதற்கு ’டைகர்’ என்று பெயர் வைத்துள்ளனர். டைகர், யாரையும் வீட்டுக்குள் அண்ட விடாது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி, முதல் மாடியில் இருந்து தனது வீட்டின் தரைத்தளத்துக்கு வந்தார் அருணா.

அங்கு மறைந்திருந்த சிறுத்தை ஒன்று, அருணாவைக் கண்டதும் தாக்கியது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருணாவின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு பாய்ந் து வந்த ’டைகர்’  சிறுத்தையுடன் கடுமையாகச் சண்டை யிட்டது. இதனால் சிறிது நேரத்தில் சிறுத்தை தப்பியோடியது.

சிறுத்தையுடன் போராடி எஜமானாரை காப்பாற்றிய அருணாவின் செல்ல நாயை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதிசய மாகப் பார்த்து செல்கின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com