விமானநிறுவன ஊழியர்புதியதலைமுறை
இந்தியா
கேள்வி எழுப்பிய பயணியுடன் வாக்குவாதம் செய்த ஊழியர்.. மன்னிப்பு கேட்ட இண்டிகோ நிறுவனம்!
டெல்லியிலிருந்து பெங்களூரு சென்ற பயணி தனது உடைமை சேதமடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, இண்டிகோ விமான நிறுவன ஊழியரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இண்டிகோ விமான நிறுவன ஊழியர் மற்றும் பயணி ஒருவர் இடையே காரசாரமான விவாதம் நடந்த வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
டெல்லியில் இருந்து பெங்களூரு செல்வதற்காக பயணி ஒருவர்
இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளார். பெங்களூருவில்
இறங்கிய போது தனது உடைமை சேதமடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பயணி, அதுதொடர்பாக இண்டிகோ விமான நிறுவன ஊழியரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது அந்த பயணி வீடியோ எடுத்ததை தட்டிக் கேட்ட போது,
இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றிய அந்த பயணி,
இவ்வாறுதான் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை
கையாளுவீர்களா என கேள்வி எழுப்பினார்.
தற்போது வீடியோ வைரலான நிலையில், அந்த பயணியிடம் மன்னிப்பு கேட் இண்டிகோ நிறுவனம் சில சலுகைகளையும் தருவதாக உறுதியளித்துள்ளது.