தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பாஜக தலைவர்கள்: தொண்டர்கள் கலக்கம்

தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பாஜக தலைவர்கள்: தொண்டர்கள் கலக்கம்

தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பாஜக தலைவர்கள்: தொண்டர்கள் கலக்கம்
Published on

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பாஜகவின் மூத்த தலைவர்கள் சிலர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவின் மூத்த தலைவர்கள் சிலர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது அக்கட்சிக்கு சிறிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜேட்லி சமூக வலைத்தளங்களில் துரிதமாக செயல்படக் கூடியவர். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் சரியான பதிலடி கொடுப்பார். பிரதமர் மோடியின் மிக நெருக்கமானவரும் கூட. இவர் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறந்துள்ளார். இந்த வார இறுதியில் அவர் இந்தியா திரும்புவார் என கூறப்படுகிறது. கடந்தாண்டு இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா. கட்சி மட்டுமில்லாமல் ஆட்சி நிர்வாகத்திலும் மோடிக்கு பல வகைகளில் துணை நிற்பவர். இவர் சமீபத்தில் பன்றிக் காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே அமித் ஷா விரைவில் வீடு திரும்புவார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அருண் ஜேட்லி மற்றும் அமித் ஷா மட்டுமில்லாமல் வேறுசில பாஜக தலைவர்களும் உடல்நிலை சரியில்லாத நிலையில் உள்ளனர்.

மத்திய சட்டத்துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் கடந்த திங்கள்கிழமை மூக்கடைப்பு பிரச்னை காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது ஐசியூவிலிருந்து நார்மல் வார்டுக்கு ரவி சங்கர் பிரசாத் மாற்றப்பட்டுவிட்டதாகவும், முன்னை விட தற்போது உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமில்லாமல் பாஜக தேசிய பொதுச் செயலாளரான ராம் லால், அதிகப்பட்ச காய்ச்சல் காரணமாக நொய்டாவில் உள்ள கைலாஷ் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டடார்.

முன்னதாக கோவா முதலமைச்சரான மனோகர் பாரிக்கர் உடல்நிலை சரியில்லாமல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் வீட்டில் ஓய்விலிருந்த அவர் சில மாதங்களுக்கு பின் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது மூக்கில் குழாயுடன் அவர் தோன்றியது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. மனோகர் பாரிக்கருக்கு போதிய ஓய்வளிக்க வேண்டும் என்ற கருத்துகளும் சமூக வலைத்தளங்களில் அப்போது எழுந்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com