\
divya mittal
divya mittaldivya mittal

உ.பி. அரசியலில் புதிய அலை.. பாரம்பரிய கட்சிகளுக்கு சவால் விடும் திவ்யா மிட்டல்! யார் இவர்?

உத்தரப் பிரதேச அரசியலில் புதிய அலை ஒன்றை உருவாக்கத் தயாராகி வருகிறார் திவ்யா மிட்டல். யார் இவர், பின்னணி என்ன? பார்க்கலாம்...
Published on: 
Summary

திவ்யா மிட்டல், 13 ஆண்டுகால ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்து, 'ஜன் நீதி பாரத்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். சாதி, மத அரசியலுக்கு எதிராக மக்களின் தேவைகளை நிறைவேற்றும் இலக்குடன், உ.பி. தேர்தலில் 403 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

ஹரியானாவைப் பூர்வீமாகக் கொண்ட திவ்யா மிட்டல், டெல்லி ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் போன்ற இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பயின்றவர். சிவில் சர்வீஸ் தேர்வுக்குச் செல்வதற்கு முன்பு, பிரபல வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையில் வர்த்தகராகப் பணியாற்றிய வலுவான தொழில் பின்னணி கொண்டவர்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகப் பதவியேற்று, மிர்சாபூர், தியோரியா உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியராகப் பணியாற்றி மக்கள் நலப் பணிகளுக்காகப் பரவலான பாராட்டுகளைப் பெற்றவர். ஆனால், மக்களின் உண்மையான குரலாக மாற வேண்டும் என்ற உத்வேகத்துடன், தனது 13 ஆண்டுகால ஐஏஎஸ் பணியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்த மாதம் 'ஜன் நீதி பாரத்' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். "ஜன் நீதியில் மக்கள்தான் ஆட்சி செய்வார்கள் என்று முழக்கமிட்டுள்ள அவர், சாதி மற்றும் மத அரசியலுக்கு அப்பால் நின்று அடிமட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே தனது கட்சியின் இலக்கு என்று அறிவித்துள்ளார். கட்சி அமைப்பைத் தீவிரமாக வலுப்படுத்திவரும் திவ்யா மிட்டல், குறைகளைக் கண்டறிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

தகுதியான வேட்பாளர்கள் அமையும் பட்சத்தில், வரவிருக்கும் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் அனைத்து 403 தொகுதிகளிலும் போட்டியிடத் தயாராகி வருகிறார் திவ்யா மிட்டல்.

divya mittal
J&K அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. ஒரே அமைச்சர் விடுவிப்பு! பிரதிநிதித்துவம் இழந்த ஜம்மு சமவெளி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com