காங். எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்துகிறார் சோனியா
மக்களவையில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை அமித்ஷா தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்று காலை சோனியாகாந்தி காங்கிரஸ் எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக நேற்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இதற்காக சட்டப்பிரிவு 370 ஐ நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டார். இதனால் மாநிலங்களவையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. கடும் அமளி ஏற்பட்டது. இதனிடையே இந்த மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார்.
இதைத்தொடர்ந்து இன்று மக்களவையில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை அமித்ஷா தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக மக்களவையில் ஆதரவும் எதிர்ப்பும் எழும். மேலும் காரசாரவிவாதமும் தொடரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பிக்களை சோனியாகாந்தி சந்தித்து பேச உள்ளார்.