\
A massive landslide has occurred in Sikkim
A massive landslide has occurred in SikkimANI

கேரள நிலச்சரிவை போல சிக்கிமிலும்.. மலையே சரிந்ததில் புதைந்த வீடுகள்: சமீபத்திய நிலவரம் என்ன ?

கேரள நிலச்சரிவை போல சிக்கிமிலும் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 
Summary

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு, 2024ல் கேரள வயநாட்டில் 200க்கும் மேற்பட்டோர் பலியான பேரழிவை நினைவூட்டுகிறது. ரிம்பி பகுதியில் ஏற்பட்ட சரிவால் வீடுகள் புதைந்த நிலையில், கூடுதல் ஆபத்து உள்ள பகுதிகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீட்புக் குழுவினர் மண், பாறை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிக்கிம் உள்ளிட்ட பல்வேறு வட கிழக்கு மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் இன்று அதிகாலை, மேற்கு சிக்கிமின் கியால்ஷிங் மாவட்டத்துக்கு உட்பட்ட ரிம்பி பகுதியில் திடீரென பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக இருந்து மண், பாறைகள் மற்றும் கட்டிட இடிபாடுகள் சரிந்து கீழ்நோக்கி பெருக்கெடுத்து வெள்ள நீரோடு அடித்துக்கொண்டு வரப்பட்டது.

இதில் 30 வீடுகள் வரை புதைந்ததாக கூறப்படும் நிலையில், அங்கு உடனடியாக மீட்புப்படையினர் அனுப்பப்பட்டனர். தற்போது வரை இங்கு எந்தவித உயிரிழப்பும் பதிவாகாத நிலையில், காயமடைந்த சிலர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் படிந்துள்ள பாறை மற்றும் மண் கழிவுகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ரிம்பி மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் மண் கழிவுகள் பெருமளவில் குவிந்துள்ளதால், ரிம்பி - யுக்சோம் இடையேயான முக்கிய போக்குவரத்துப் பாதை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பகுதியில் கூடுதல் நிலச்சரிவு ஆபத்து உள்ளதாகக் கருதப்படும் வீடுகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இதனிடையே இந்த நிலச்சரிவு தொடர்பாக வெளிவரும் காட்சிகள் கேரள நிலச்சரிவை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஒரு பகுதி மலையே சரிந்ததில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. அதே போன்ற ஒரு சம்பவம் தற்போது வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் நடைபெற்றுள்ளது என்றாலும் இதில் உயிரிழப்பு ஏற்படாதது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

A massive landslide has occurred in Sikkim
இஸ்ரேலுக்கு உச்சகட்ட அவமானம் : ஒரே நொடியில் ஆவேசமான நெதன்யாகு.. நடந்தது என்ன ?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com