\
’அவர் நலமாக இருந்தால்...’ காற்று மாசால் சிவலிங்கத்துக்கும் ’மாஸ்க்’!

’அவர் நலமாக இருந்தால்...’ காற்று மாசால் சிவலிங்கத்துக்கும் ’மாஸ்க்’!

’அவர் நலமாக இருந்தால்...’ காற்று மாசால் சிவலிங்கத்துக்கும் ’மாஸ்க்’!
Published on: 

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், காற்று மாசு காரணமாக, சிவலிங்கத்துக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில், காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். இந்நிலையில் இந்தக் காற்று மாசு, அதன் அக்கம் பக்கத்து மாநிலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி யிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதையடுத்து அங்குள்ள தர்கேஷ்வர் மகாதேவ் கோயிலில் உள்ள சிவலிங்கத்துக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது.

‘வாரணாசியில் காற்று மாசு அதிகரித்துவிட்டது. இந்த விஷக் காற்றில் இருந்து கடவுள் சிவபெருமானை காப்பாற்றுவதற்காக, மாஸ்க் அணிவித்திருக்கிறோம். அவர் நலமாக இருந்தால், நாம் நலமாக இருப்போம்’ என்று அங்குள்ள பக்தர்கள் தெரிவித் துள்ளனர். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com