\
ஓடுதளத்தில் நின்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் மீது மோதிய மாருதி கார்! டெல்லியில் பரபரப்பு

ஓடுதளத்தில் நின்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் மீது மோதிய மாருதி கார்! டெல்லியில் பரபரப்பு

ஓடுதளத்தில் நின்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் மீது மோதிய மாருதி கார்! டெல்லியில் பரபரப்பு
Published on

டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானத்தின் முன் பகுதியில் கார் வேகமாக சென்று மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ நிறுவன விமானம் மீது கட்டுப்பாட்டை இழந்த மாருதி கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு நிறைந்த விமான நிலையத்திற்குள் நிகழ்ந்த இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் இருந்து பாட்னா செல்வதற்காக ஓடுதளத்தில் நின்று கொண்டிருந்த விமானத்தின் மீது, எப்படி கார் வந்து மோதியது என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கேள்வி எழுந்துள்ளது. இண்டிகோ விமானத்தின் மீது மோதிய அந்தக் காரும் இண்டிகோ நிறுவனத்தை சேர்ந்தது என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com