இந்தியா
குடித்துவிட்டு போலீஸ் மண்டையை உடைத்தவர் கைது: வைரல் வீடியோ
குடித்துவிட்டு போலீஸ் மண்டையை உடைத்தவர் கைது: வைரல் வீடியோ
குடித்துவிட்டு நடுரோட்டில் ஏற்பட்ட தகராறில் காவல்துறையினரை தாக்கியவர் கைது செய்யப்பட்டவர்.
கர்நாடகாவின் தேவனகிரி பகுதியில் ஒரு நபர் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரை போக்குவரத்து காவலர்கள் இருவர், தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த நபர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட, குடித்துவிட்டு வந்த நபர், சாலையோரம் இருந்த கடையின் மண்பாண்ட பொருட்களை எடுத்து ஒரு காவலரை தாக்கினார். இதில் அந்தக் காவலரின் தலையில் அடிபட்டு, ரத்தம் வழிந்தது. இதையடுத்து மற்றொரு காவலர் மீது பாய்ந்து, அவரை கீழே தள்ளி தாக்கினார். அத்துடன் மேலும் அவர் தொடர் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அந்த நபரை கைது செய்த காவல்துறையினர், அவர்மீது வழக்குப்பதிந்தனர்.