சிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ!

சிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ!

சிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ!
Published on

டெல்லி உயிரியல் பூங்காவில் சிங்கத்திடம் நேருக்கு நேர் நின்ற ஒருவரால் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டெல்லி உயிரியல் பூங்காவிலுள்ள விலங்குகளை வழக்கம்போல மக்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சிங்கங்கள் நடமாடும் பகுதியில், பிரம்மாண்ட சுவர் மற்றும் இரும்பு வேலிகளை தாண்டி இளைஞர் ஒருவர் உள்ளே நுழைந்தார். சுற்றியிருப்பவர்கள் அதைப் பார்த்து அச்சத்தில் அலற, அது குறித்தெல்லாம் கவலைப்படாத அந்த இளைஞர் நேராக சிங்கத்தின் அருகில் சென்றார்.

சில அடிகூட இடைவெளி இல்லாத அளவிற்கு அருகே அமர்ந்து, சிங்கத்தின் முகத்தை நேருக்கு நேர் அந்த இளைஞர் பார்த்து கொண்டிருக்க, சிங்கமும் அமைதியாக இருந்தது. தரையில் அமர்ந்து சிங்கத்தின் முகத்தை தடவிக் ‌கொடுத்தும், அதனிடம் ஏதோ பேசியும் கொண்டிருந்த இளைஞரின் செயல் காண்போரை அச்சத்தில் ஆழ்த்தியது. சில நொடிகள் அமைதியாக இருந்த சிங்கம், பின் அந்த இளைஞரை தாக்க முயன்றது. அப்போது மயக்க ஊசியை சிங்கத்தின் உடலில் செலுத்தி இளைஞரை உயிரியல் பூங்கா ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

விசாரணையில், பீகாரைச் சேர்ந்த அந்த இளைஞரின் பெயர் ரேஹன் கான் என்பது தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட அவர், உயரமான இரும்பு பாதுகாப்பு வேலிகளை தாண்டி சிங்கத்திடம் சென்றதாக கூறப்படுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com