\
கேரள மாநிலம்
கேரள மாநிலம்புதிய தலைமுறை

கேரளா | நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த 24 வயது இளைஞர்!

கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 24 வயது இளைஞர் உயிரிழந்தார்.
Published on

கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 24 வயது இளைஞர் உயிரிழந்தார். அந்த நபர் பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு வந்திருந்த நிலையில், உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த தகவலை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த அவரது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 5 பேருக்கு லேசான காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாகவும், அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.

கேரள மாநிலம்
சிறுமி வன்கொடுமை |புகாரை திரும்பப் பெற மறுப்பு.. 50 பட்டியலின குடும்பத்தை வெளியேற்றிய உயர்சாதியினர்!

உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2018ஆம் ஆண்டு கேரளாவில் நிபா வைரஸால் 17 பேர் உயிரிழந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com