\
இது வேற லெவல்: சாமர்த்தியமாக தண்ணி காட்டும் நபர்

இது வேற லெவல்: சாமர்த்தியமாக தண்ணி காட்டும் நபர்

இது வேற லெவல்: சாமர்த்தியமாக தண்ணி காட்டும் நபர்
Published on

கேரளாவில் மது விற்பனையாளர் ஒருவர், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு சாமர்த்தியமாக தண்ணி காட்டியுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 500 மீட்டர் தூரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மதுக் கடைகள் மற்றும் மதுவிடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கேரள மாநிலம் பரவூரில் மது விடுதியை நடத்தி வந்த ஒருவர், மாற்றுவழியை தேடி மிகவும் சாமர்த்தியமாக விற்பனை செய்து வருகிறார். நெடுஞ்சாலையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் இருந்த மது விடுதியை, தனக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்தி, மதுக்கடையை அப்படியே பின்நோக்கி நகர்த்தி சென்று விட்டார். பழைய கடையின் நுழைவு வாயிலில் இருந்து குறுக்கும் நெடுக்குமாகத் தடுப்புகளை அமைத்து பாதையை ஏற்படுத்தி அன்றாடக் குடிமகன்களை தன்வசத்திற்குள்ளேயே வைத்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com