உத்திர பிரதேசம்: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அந்த வீடியோவை வெளியிட்ட நபர் கைது

உத்திர பிரதேசம்: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அந்த வீடியோவை வெளியிட்ட நபர் கைது

உத்திர பிரதேசம்: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அந்த வீடியோவை வெளியிட்ட நபர் கைது
Published on

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்டத்தில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

உத்திரப் பிரதேச மாநிலம் ரேவ்தி பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திரா. இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 22 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். அத்துடன் அதனை வீடியோவும் எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்தது. பின்னர், கடந்த டிசம்பரில் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். அது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.  

இந்த வீடியோ விவகாரம் வெளியானதை அடுத்து அந்த பெண்ணை அவரது கணவர் கைவிட்டுள்ளார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்ததை அடுத்து, இப்போது குற்றவாளி நரேந்திரா கைது செய்யப்பட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com