சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ஒரு முக்கிய திருப்புமுனை!

சுரங்க இடிபாடுகளுக்கிடையே 6 அங்குல விட்டமுள்ள குழாயை உள்ளே செலுத்துவதில் மீட்பு குழுவினர் வெற்றி கண்டுள்ளனர்.
உத்தராகண்ட்
உத்தராகண்ட் முகநூல்

உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாராவில் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, இடிபாடுகளுக்கிடையே 6 அங்குல விட்டமுள்ள குழாயை உள்ளே செலுத்துவதில் மீட்பு குழுவினர் வெற்றி கண்டுள்ளனர்.

இந்த குழாயை உள்ளே செலுத்தியதன் மூலம் உள்ளே சிக்கிக்கொண்டுள்ள 41 தொழிலாளர்களுக்கும் திட உணவுகளை
அனுப்பமுடியும். முன்னதாக ஒரு நான்கு அங்குல குழாய் மூலம் ஆக்சிஜன், உலர் பழங்கள், மருந்துகள் போன்றவை அனுப்பப்பட்டு வந்தன.

தற்போது 6 அங்குல குழாய் உள்ளே செலுத்தப்பட்டுள்ளது மீட்புப் பணியில் முதல் முக்கிய திருப்புமுனை என தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் அன்ஷு மணீஷ் கல்கோ தெரிவித்தார். இந்த குழாய் சுமார் 53 மீட்டருக்கு உள்ளே செலுத்தப்பட்டுள்ளது. உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களால் தங்களது குரலை கேட்கமுடிகிறது என மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே டிஆர்டிஓ எனப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் ட்ரோன்கள் மற்றும் ரோபோக்களுக்கு சுரங்கப்பாதை அமைந்துள்ள பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தொழிலாளர்களை மீட்பதற்கு மாற்று
வழிகள் ஏதும் உள்ளனவா என இந்த ட்ரோன்கள் மற்றும் ரோபோக்கள் ஆய்வு நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட்
மரண பிடியில் இருக்கும் 41 தொழிலாளர்கள் நிலை என்ன..? 9 வது நாளாக நீடிக்கும் பணிகள்

அதேநேரம் சுரங்கப்பாதையை அடைத்துள்ள இடிபாடுகள் வழியாக துளையிடும் பணி மீண்டும் தொடங்கவில்லை. இந்த பணிகள், பெரும் பாறைகள் குறுக்கிட்டதால் நிறுத்தப்பட்டிருந்தன.

இதற்கிடையில், சுரங்கப்பாதையின் மேற்பகுதியிலிருந்து 80 மீட்டர் ஆழத்திற்கு துளையிட்டு தொழிலாளர்களை அடையும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஓஎன்ஜிசி நிறுவனம் பயன்படுத்தும் கனரக துளையிடும் கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவிகளை குன்றின் உச்சிக்கு
கொண்டு செல்வதற்காக சிறப்பாக சாலை அமைக்கப்பட்டது. சர்வதேச சுரங்கப்பாதை வல்லுநரான அர்னால்ட் டிக்ஸ் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com