“என் வாழ்க்கையை இத்துடன் முடித்துக்கொள்ளப் போகிறேன்” - சண்டையில் காதலியை கொன்ற காதலர்!

“என் வாழ்க்கையை இத்துடன் முடித்துக்கொள்ளப் போகிறேன்” - சண்டையில் காதலியை கொன்ற காதலர்!
“என் வாழ்க்கையை இத்துடன் முடித்துக்கொள்ளப் போகிறேன்” - சண்டையில் காதலியை கொன்ற காதலர்!

ஜம்முவில் காதலர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், காதலியை காதலரே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்முவில் உள்ள தல்லாப் டில்லோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுமேதா ஷர்மா. பல் மருத்துவராக பணி புரிந்து வரும் இவரும், ஜம்முவில் உள்ள ஜானிபூரில் உள்ள பாம்போஷ் காலனியில் வசித்து வரும் சக பல் மருத்துவரான ஜோஹர் கனாய் என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட சண்டையில் சுமேதா ஷர்மாவை, காதலர் ஜோஹர் கனாய் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் ஜோஹர் கனாய், தன்னுடைய முகநூல் பக்கத்தில், “என் வாழ்க்கையை இத்துடன் முடித்துக்கொள்ளப் போகிறேன்” எனப் பதிவிட்டதாகத் தெரிகிறது. இதைப் பார்த்த உறவினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து ஜோஹர் கனாய் வீட்டுக்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த சுமேதா ஷர்மாவின் உடலையும், தன் வயிற்றில் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற ஜோஹர் கனாயின் உடலையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், இதில் சுமேதா ஷர்மா ஏற்கெனவே இறந்தவிட்டதாகவும், ஜோஹர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி பிரிவு 302இன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன சுமேதா ஷர்மாவும், அவரை கொலை செய்த ஜோஹரும் ஜம்முவில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பை இணைந்து படித்ததாகவும், பின்னர் மேற்படிப்புக்காக சுமேதா அக்கல்லூரியில் இருந்து வெளியேறியதாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், கடந்த மார்ச் 7ஆம் தேதி ஹோலி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக, தன்னுடைய காதலரான ஜோஹர் வீட்டுக்கு சுமேதா வந்ததாகவும், அப்போது அவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மோதலில்தான் இந்த கொலை நடந்துள்ளது என தெரிவித்திருக்கும் போலீசார், இதுகுறித்து குடும்பத்தினர் யாரும் பதில் சொல்லவில்லை என தெரிவித்துள்ளனர். சுமேதா ஷர்மா உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com