பரிசு தருவதாகச் சொல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: லிப்ஃட் பொறியாளர் கைது!
பரிசுத் தருவாகச் சொல்லி சிறுமியை அடுக்குமாடி குடியிருப்பின் மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த லிப்ஃட் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி அருகில் குர்கானில் அடுக்குமாடி குடியிருப்பின் லிஃப்ட் பொறியாளராகப் பணியாற்றியவர் அருண் சர்மா (21). குடியிருப்பில் உள்ளவர்களிடம் நன்கு பழகியுள்ள அருண் சர்மா, 14 வயது சிறுமி ஒருவரின் அம்மாவிடமும் சகஜமாக பழகி வந்துள்ளார். இதனால் சிறுமிக்கு அவரை நன்றாகத் தெரியும்.
கடந்த திங்கட்கிழமை, லிப்ஃட் அருகே வந்த சிறுமியை அழைத்த அருண், பரிசு தருவதாகக் கூறி மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் கருத்தடை மாத்திரையை வலுக்கட்டாயமாகச் சிறுமிக்கு கொடுத்துள்ளார். இதை யாரிடமும் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.
சிறுமி நடக்க முடியாமல் படியில் இறங்கியதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், அவரது தாயிடம் தெரிவித்தனர். அவர் விசாரித்தபோது, நடந்ததை தெரிவித்துள்ளார சிறுமி. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த சிறுமிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்களும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டதை உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து சிறுமியின் தாய், குர்கான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அருண் சர்மாவை கைது செய்தனர்.