மைசூர் : தீக்கிரையான தினக்கூலி சையத்தின் நூலகத்திற்கு 8243 புத்தகங்கள் அளிக்க அரசு முடிவு
கர்நாடகாவின் மைசூர் பகுதியில் உள்ள குடிசை வாழ மக்கள் வசித்து வந்த பகுதியில் தினக்கூலி ஊழியரான சையத் ஐசக்கின் உழைப்பில் உருவான நூலகம் கடந்த 9ஆம் தேதியன்று தீக்கிரையானது. இந்த தீ விபத்தில் நூலகத்தில் இருந்த புத்தகங்கள் முழுவதும் கருகின. இந்நிலையில் அவருக்கு உதவும் வகையில் சுமார் 8243 புத்தகங்களை நன்கொடையாக வழங்க உள்ளது.
இந்த தீ விபத்து ஏற்பட அடையாளம் தெரியாத விஷமிகள் சிலர் காரணம் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் அரசு இந்த உதவியை அளிக்க முன்வந்துள்ளது.
“மாநில நூலக துறை சார்பில் சுமார் 8243 புத்தகங்கள் சையத் ஐசக்கின் நூலகத்திற்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது” என அம்மாநில ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வித் துறை அமைச்சர் சுரேஷ்குமார் அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளார். இதனை முன்மொழிந்து கொல்கத்தாவில் இயங்கி வரும் ராஜா ராம் மோகன் ராய் நூலாக அறக்கட்டளைக்கு ஒரு புரோபோசல் அனுப்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கன்னட மொழியில் குரான், பகவத் கீதை மற்றும் பைபிள் என மூன்றும் இந்த நூலகத்தில் இருந்துள்ளன.
கன்னட மொழி எதிர்ப்பாளர்கள் தான் இந்த விஷம பணியை மேற்கொண்டுள்ளதாக சையத் ஐசக் குற்றம்சாட்டி உள்ளார். புத்தகங்களுக்கு பதிலாக என்னையும், எனது குடும்பத்தையும் கூட அவர்கள் தீயிட்டு நெருப்புக்கு இரையாக்கி இருக்கலாம் எனவும் சொல்கிறார் அவர்.