மேற்குவங்கத்தைச் சேர்ந்த தம்பதியினர் புலிகளை அழிவிலிருந்து மீட்கும் நோக்கில் நாடு முழுவதும் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கொல்கத்தாவில் வசிக்கும் ரதிந்த்ரா தாஸ் மற்றும் அவரது மனைவி கீதாஞ்சலி ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி கொல்கத்தாவின் புலிகள் காப்பகத்தில் இருந்து தங்களின் பயணத்தை தொடங்கினர். இதைத் தொடர்ந்து வடகிழக்கு, வடக்கு, வடமேற்கு மாநிலங்கள் வழியாக தென் மாநிலங்களில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டனர்.
தற்போது ஒடிஷா வந்திருக்கும் தம்பதியை அங்குள்ளவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பயணத்தின்போது ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள புலிகள் காப்பகங்களுக்கு சென்று பார்வையிட்டதாகவும் புலிகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும் ரதிந்த்ரா தாஸ் தெரிவித்தார்.

