இரண்டு உயிர்களை வாழ வைத்துவிட்டு தைரியமாக உயிரைவிட்ட சிறுவன்..!

இரண்டு உயிர்களை வாழ வைத்துவிட்டு தைரியமாக உயிரைவிட்ட சிறுவன்..!

இரண்டு உயிர்களை வாழ வைத்துவிட்டு தைரியமாக உயிரைவிட்ட சிறுவன்..!
Published on

கால்பந்து போட்டி மீது தீராதக் காதல்.. அதுவும் பிரான்ஸ் அணியின் வெறித்தனமான ரசிகன்.. அப்படிப்பட்ட ரசிகன் ஒருவனால் பிரான்ஸ் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. காரணம் பிரான்ஸ் அணியின் வெற்றியின்போது சிறுவன் உயிருடன் இல்லை. ஆனால் இரண்டு உயிர்களை வாழ வைத்துவிட்டுத்தான் சிறுவன் இந்த உலகக்தை விட்டு சென்றிருக்கிறான்.

கேரளாவை சேர்ந்த 14 வயது சிறுவன் ஃபெரோஸ். கால்பந்து போட்டியை வெறித்தனமாக ரசிப்பவன். வீடு முழுக்க காலியாக உள்ள சுவர்களில் எல்லாம் கால்பந்து வீரர்களின் முகத்தைதான் ஒட்டி வைத்திருப்பான். அதுமட்டுமில்லாமல் தன் நோட், புத்தகங்களில் கூட கால்பந்து வீரர்களின் முகம்தான் தெரியும். அதுவும்  பிரான்ஸ் அணிக்குதான் அதிக முக்கியத்துவம். காரணம் பிரான்ஸ் அணியின் வெறித்தனமாக ரசிகன் சிறுவன் ஃபெரோஸ். நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி ஒவ்வொரு சுற்றாக முன்னேறி வந்தபோது ஃபெரோஸின் வெற்றிக் கொண்டாட்டத்தை பலரும் கண்டு மகிழ்ந்திருக்கின்றனர். ஆனால் நடைபெற்று முடிந்த அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால் அந்த வெற்றியை கண்டு ரசிக்க பிரான்ஸ் அணியின் உண்மையான ரசிகர் ஒருவர் இல்லை. ஆம். சிறுவன் ஃபெரோஸ் இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார்.

கடந்த ஜூலை 5-ஆம் தேதி ஃபெரோஸ் தனது தம்பி மற்றும் நண்பர்களுடன் கடற்கரையோரத்தில் நின்று கால்பந்து போட்டி விளையாடியுள்ளனர். அப்போது பந்து எதிர்பாராதவிதமாக கடலுக்குள் சென்றுள்ளது. அப்போது ஓடிப்போன ஃபெரோஸின் தம்பி, பந்தை நீரிலிருந்து எடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் ஃபெரோஸின் தம்பி நீரில் மூழ்கிவிட்டான். அதனை பார்த்த மற்றொரு சிறுவன், ஃபெரோஸின் தம்பியை காப்பாற்ற முற்பட்டிருக்கிறான். ஆனால் அந்த நேரத்தில் அவனும் மாட்டிக்கொண்டார். உடனே சுதாரித்து செயல்பட்ட ஃபெரோஸ், இருவர்களையும் ஒருவழியாக கடலுக்குள் இருந்து வெளியே தள்ளியிருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் ஃபெரோஸ் கடல் நீருக்குள் சிக்கிக் கொண்டார். சுமார் 15 நிமிடங்கள் நீரில் தத்தளித்த பின்பு தான் ஃபெரோஸை பலரும் வந்து மீட்டிருக்கின்றனர். கடலுக்குள் மூழ்கிய நேரத்தில் ஃபெரோஸ் சக்தியையும் முழுங்கியதாக தெரிகிறது. 5 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஃபெரோஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அந்தக் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

ஃபெரோஸின் குடும்பத்தினர் அந்த அளவிற்கு வசதியில்லாதவர்கள். இதனால் ஃபெரோஸின் இறுதிச் சடங்கை கூட சுற்றத்தினரே செய்து முடித்துள்ளனர். இதனிடையே ஃபெரோஸ் என்னைக் காப்பாற்றிய போதுதான் அலையில் சிக்கி உயிரிழந்துவிட்டான் என பெரோஸின் நண்பர் ஒருவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஃபெரோஸின் தாய் கூறும்போது, “ஃபெரோஸ் கால்பந்து போட்டியை அதிகம் விரும்புவன். என் நல்ல மகனை நான் இழந்துவிட்டேன்” என கண்ணீருடன் தெரிவித்தார். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு உயிர்களை காப்பாற்றிவிட்டு ஃபெரோஸ் சென்றுள்ளதாக ஊர்மக்கள் பலரும் தெரிவித்தனர்.

Courtesy: TheNewsMinute

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com