இந்தியா
தண்ணீராக ஓடியது பீர்: மதுக் கடையை நொறுக்கிய பெண்கள்
தண்ணீராக ஓடியது பீர்: மதுக் கடையை நொறுக்கிய பெண்கள்
உத்தரப் பிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியில் உள்ள மதுபானக் கடையை அப்பகுதி பெண்கள் அடித்து நொறுக்கினர்.
மொராதாபாதில் உள்ள ஜெயந்திபூர் குடியிருப்புப் பகுதியில் இயங்கி வந்த மதுபானக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி பெண்கள் பலமுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அந்தப் பகுதி பெண்கள், சம்பந்தப்பட்ட மதுபான கடை முன் ஒன்று கூடினர். பின்னர், கடையில் வைக்கப்பட்டிருந்த பாட்டில்களை சாலையில் வீசி எறிந்தனர். இதனால் அந்தப் பகுதி சாலையில், பீரும் குவார்ட்டரும் தண்ணீராக ஓடியது. பின்னர் கடையை தீ வைத்து கொளுத்தினர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.