தப்பிக்கலாம் என நினைத்தவர்களை காவு வாங்கிய வெள்ளம்! பதைபதைக்கும் உத்தராகண்ட் காட்சிகள்

தப்பிக்கலாம் என நினைத்தவர்களை காவு வாங்கிய வெள்ளம்! பதைபதைக்கும் உத்தராகண்ட் காட்சிகள்
தப்பிக்கலாம் என நினைத்தவர்களை காவு வாங்கிய வெள்ளம்! பதைபதைக்கும் உத்தராகண்ட் காட்சிகள்

உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு பெரு வெள்ளத்தில் இருந்து தப்பிடலாம் என நினைத்து ஓடியவர்களை காட்டாறு அடித்துச் செல்லும் வீடியோ காண்பவர்களை கதிகலங்க செய்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்திலுள்ள நந்தா தேவி பனிப்பாறைகளில் ஏற்பட்ட பனிச்சரிவால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருகிலுருந்த கிராமங்கள், நீர்மின் நிலையம் மற்றும் பல உயிர்களை வாரிக்கொண்டு போனது. இதில் காணாமல்போன பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் பனிப்பாறைகள் அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்று உத்தராகண்ட். இமயமலையைத் தொடர்ந்து இந்தியாவிலேயே மிக உயரமான மலைகளும் இங்குதான் இருக்கிறது. உத்தராகண்ட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல ஒரு பெரு வெள்ளம் ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இப்போது பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் குறுக்கே இருந்தவர்கள் பலர் அப்படியே அடித்துச் செல்லப்பட்டனர். அப்படியான ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது.

அதில் பெருவெள்ளத்தில் இருந்து தப்பிக்க உயரமான கட்டடத்துக்கு சில தொழிலாளர்கள் ஓடி வருகிறார்கள். அப்படி ஓடி வந்தால் எப்படியும் நாம் தப்பித்துவிடலாம் என்று நினைத்துள்ளனர். அவர்கள் அந்த உயரமான இடத்தில் அங்கும் இங்கும் ஓடுகிறார்கள். ஆனால் இறுதியில் அந்த பெருவெள்ளத்தில் சிக்கி அனைவரும் அப்படியே அடித்துச்செல்லப்படுகிறார்கள். அந்தக் காட்சி பார்ப்போருக்கு ஒருவித பயத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com