உடலில் பிறை குறியுடன் ஆடு.. 2 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம்! #video

ராஜஸ்தானில், உடலில் பிறை குறியுடன் உள்ள ஆடு, வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.
பிறை குறியுடன் கூடிய ஆடு
பிறை குறியுடன் கூடிய ஆடுpt

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரித் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆடுகளின் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், ஆடு ஒன்று அனைவரின் கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

உடலில் பிறை குறியுடன் உள்ள அந்த ஆட்டிற்கு, 2 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உடலில் வெள்ளை நிறத்தில் பிறை குறியுடன் இருக்கும் அந்த ஆட்டினை, பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச்செல்கின்றனர்.

பிறை குறியுடன் கூடிய ஆடு
பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: வாரச் சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகம் - எத்தனை கோடிகள் தெரியுமா?

இதேபோல், மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், பக்ரீத் பண்டிகையையொட்டி, ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்றது. 50 ஆயிரம் ரூபாய் முதல் ஏழரை லட்சம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com