\
ஆற்றைக் கடந்து மருத்துவ சேவை: சுகாதார பணியாளருக்கு குவியும் பாராட்டு!

ஆற்றைக் கடந்து மருத்துவ சேவை: சுகாதார பணியாளருக்கு குவியும் பாராட்டு!

ஆற்றைக் கடந்து மருத்துவ சேவை: சுகாதார பணியாளருக்கு குவியும் பாராட்டு!
Published on: 

சத்தீஸ்கரில் பெண் சுகாதார பணியாளர் ஒருவர் தினமும் ஆற்றைக் கடந்து சென்று மருத்துவ சேவை ஆற்றி வருகிறார்.

சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரில் உள்ள கிராம மக்களுக்கு சுகாதார சேவையை அளிக்க பெண் பணியாளர் ஒருவர் தினமும் வருகிறார். இவர் இந்த கிராமத்திற்கு வரும் போது நாள்தோறும் ஆற்றை கடந்து பணிக்கு செல்கிறார். அவரது உதவியாளர்களும் இவ்வாறே ஆற்றை கடந்து தினமும் பணிக்கு செல்கின்றனர். 

இதுகுறித்து பேசிய பெண் சுகாதார பணியாளர், “ தினமும் இந்த கிராமத்திற்கு செல்ல நான் ஆற்றைக் கடந்து செல்கிறேன். முதலில் ஆற்றைக் கடக்க ஆரம்பத்தில் அச்சமடைந்தேன். எனினும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் கடமை இருப்பதால் அந்த பணியை செய்கிறேன். மேலும் ஒருநாளும் இந்தப் பணியை  செய்ய நான் தவறியதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com