2 வயது மகளை கொன்ற அரசியல் பிரமுகர் - ஊருக்கு தெரியாமல் செய்த திருமணத்தால் விபரீதம்

2 வயது மகளை கொன்ற அரசியல் பிரமுகர் - ஊருக்கு தெரியாமல் செய்த திருமணத்தால் விபரீதம்

2 வயது மகளை கொன்ற அரசியல் பிரமுகர் - ஊருக்கு தெரியாமல் செய்த திருமணத்தால் விபரீதம்
Published on

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் நிங்கப்பா. 35 வயதான அவருக்கு அரசியலில் பெரிய ஆளாக உருவாக வேண்டுமென்ற பேர் ஆர்வம். 

அதனால் ஊருக்குள் பசுந்தோல் போர்த்திய புலியாக வலம் வந்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி மூன்று ஆண் பிள்ளைகளுக்கு தந்தையான நிங்கப்பாவிற்கு சசிகலா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. நாளடைவில் அது காதலாக மலர அவரை இரண்டாவதாக மனம் முடித்துள்ளார் நிங்கப்பா. 

இருப்பினும் இரண்டாவது திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தார் அவர். நிங்கப்பா மற்றும் சசிகலாவுக்கு இரண்டு வயதில் சிரிஷா என்ற பெண் குழந்தை ஒன்றும் இருந்துள்ளது.

இந்நிலையில் தங்களது திருமணத்தை ஊர் அறிய சொல்லும்படி நிங்கப்பாவை வற்புறுத்தி வந்துள்ளார் சசிகலா. 

பஞ்சாயத்து தேர்தலுக்காக தயாராகி வந்த நிங்கப்பா குழந்தை சிரிஷாவை தன்னிடம் விட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும்படி சசிகலாவிடம் சொல்லியுள்ளார். அவரும் அதன்படியே செய்துள்ளார்.

அதனையடுத்து தனது அரசியல் வாழ்விற்கு சிரிஷா முட்டிக்காட்டையாக இருப்பார் அஞ்சி குழந்தை சிரிஷாவை கொடூரமாக அடித்து, குழி தோண்டி புதைத்து கொன்றுள்ளார் நிங்கப்பா. 

தனது சொந்த மகளையே நிங்கப்பா கொலை செய்தது போலீசாரிடம் மகளை காணவில்லை என சசிகலா கொடுத்து புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் சுமார் ஒரு மாத காலம் கழித்து தெரியவந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com