20 ஆயிரம் கி. மீ.,18 நாடுகள், 70 நாட்கள்- டெல்லி டூ இலண்டன் பேருந்தில் கனவுப் பயணம்

20 ஆயிரம் கி. மீ.,18 நாடுகள், 70 நாட்கள்- டெல்லி டூ இலண்டன் பேருந்தில் கனவுப் பயணம்
20 ஆயிரம் கி. மீ.,18 நாடுகள், 70 நாட்கள்- டெல்லி டூ இலண்டன் பேருந்தில் கனவுப் பயணம்

இது ஒரு கனவைப் போலத்தான் இருக்கிறது. டெல்லியில் இருந்து இலண்டன் வரை செல்லும் பேருந்தை இயக்கப்போவதாக அட்வெஞ்சர்ஸ் ஓவர் லேண்ட் என்ற பயண நிறுவனம் இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளது. அதனை ஹாப் அன் ஹாப் ஆப் பேருந்து சேவை எனக் குறிப்பிட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், இந்தியாவில் தொடங்கி யுகேவில் பயணம் முடியும் என்று தெரிவித்துள்ளது. ஒவ்வொருவரும் கொரோனா சூழல் எப்போது முடியும், எப்போது வெளியூர்களுக்குச் செல்லலாம் என்ற ஆவலுடன் காத்திருக்கும்போது இப்படியொரு இனிப்பான அறிவிப்பு.

பயணக் காதலர்களின் ஆசைக்கு நீருற்றும் நோக்கத்துடன் வந்துள்ள அட்வெஞ்சர்ஸ் ஓவர்லேண்ட் நிறுவனம், ஒவ்வொருவருடைய கனவையும் 2021, மே மாதத்தில் நனவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. டெல்லி டூ இலண்டன் வரையான 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை எழுபது நாட்களில் அடையும் திட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

பேருந்துப் பயணத்தில் 18 நாடுகளைக் கடந்து செல்லவேண்டும்.  டெல்லி டூ இலண்டன் பேருந்து -  மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, லேட்வியா, லித்வேனியா, போலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைக் கடந்து செல்லும். 

இதேபோல பிரிட்டிஷ் காலத்தில் இலண்டன் டூ கொல்கத்தா வரை ஒரு பேருந்து சென்றவந்த கதை சமூக வலைதளங்களில் பேசப்பட்டதை கவனித்த நிறுவனத்திற்கு இந்த யோசனை வந்துள்ளது. ஆல்பர்ட் என்ற அந்த டபுள்டெக்கர் பேருந்து 15 முறை இலண்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்துசென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com