திருநங்கை மீது தாக்குதல் நடத்திய முன்னாள் காதலன்.. தடுக்கவந்த புதிய காதலன் கொலை

திருநங்கை மீது தாக்குதல் நடத்திய முன்னாள் காதலன்.. தடுக்கவந்த புதிய காதலன் கொலை

திருநங்கை மீது தாக்குதல் நடத்திய முன்னாள் காதலன்.. தடுக்கவந்த புதிய காதலன் கொலை

டெல்லியில் தன்னை காதலித்து ஏமாற்றி 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும் மோசடி செய்ததாக திருநங்கையின் காதலனை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

டெல்லியைச் சேர்ந்த அனில் கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சுனிதா என்ற திருநங்கையை காதலித்து வந்துள்ளார். இருவரும் சில மாதங்களுக்கு லிவ் இன் டுகெதர் முறையில் ஒன்றாக வாழத் துவங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், திடீரென அனிலை விட்டு சுனிதா விலகத் துவங்கியதாகவும், அனில் வீட்டில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து முல்தானி தண்டா பகுதியில் குட்டு என்ற இளைஞருடனும், மேலும் 2 திருநங்கைகளுடன் வசிக்கத் துவங்கினார் சுனிதா. இதில் சுனிதா தன்னுடன் வீட்டில் வசிக்கும் குட்டுவை காதலிப்பதாக அனிலுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, இரவு 8 மணியளவில் சுனிதா வீட்டிற்கு வந்து தனது 40 ஆயிரம் ரூபாயை திருப்பித் தருமாறு கேட்டு அனில் கூச்சலிட துவங்கியுள்ளார்.

இதையடுத்து அனில், சுனிதா மற்றும் குட்டு ஆகிய இருவருடனும் சண்டையிட துவங்கியுள்ளார். வாக்குவாதத்தில் துவங்கிய சண்டை, ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறவே, தன்னிடமிருந்த கத்தியால் சுனிதா, குட்டு இருவரையும் தாக்கத் துவங்கினார் அனில். இந்த தாக்குதலில் சுனிதாவின் முதுகிலும் குட்டுவின் கழுத்திலும் கத்திக் குத்து பலமாக விழவே இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.

இருவரையும் பக்கத்து வீட்டுக்காரர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், சண்டை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் கலாட்டா செய்து கொண்டிருந்த அனிலை கைது செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணையை துவக்கினர்.

கழுத்தில் ஏற்பட்ட ஆழமான கத்திக் குத்து காரணமாக குட்டு உயிரிழந்து விட்டதாகவும் சுனிதாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அனில் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் கூடுதல் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com