உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது - பிரதமர் மோடி

உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது - பிரதமர் மோடி
உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது - பிரதமர் மோடி

கடந்த 5 ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பு உயர்ந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்காவுக்கு 7 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில், அதிபர் ட்ரம்புடன் பங்கேற்றார். தொடர்ந்து ஐக்கிய நாடுகள் பொது அவை கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேசினார். அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய பிரதமர் மோடிக்கு, தலைநகர் டெல்லியில் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாஜகவினர் திரண்டிருந்த நிலையில், சிறிது தூரம் நடந்து சென்ற பிரதமர் மோடி, அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

டெல்லி பாலம் விமான நிலையத்தில் திரண்டிருந்த பாஜகவினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாகவும் அதற்கு 130 கோடி இந்தியர்கள்தான் காரணம் என்றும் தெரிவித்தார்.

ஹவுடி மோடி நிகழ்ச்சி இந்தியா அமெரிக்கா இடையேயான நல்லுறவை வெளிக்காட்டியதாக பிரதமர் குறிப்பிட்டார். துல்லியத்தாக்குதல் நடைபெற்ற தினத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, இதன் மூலம் இந்தியாவின் வலிமையை உலகுக்கு உணர்த்தியதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com