20 மணி நேர போராட்டம்; நம்பிக்கை கொடுத்த சத்தம்.. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு

கர்நாடகாவில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை 20 மணி நேரம் போராடி உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா
கர்நாடகாபுதிய தலைமுறை

கர்நாடக மாநிலம், விஜயபுரம் மாவட்டம் அருகே உள்ள லட்சண கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் - பூஜா தம்பதிக்கு 2 வயதில் சுவாதிக் என்ற குழந்தை உள்ளது. இந்தக் குழந்தையின் தாத்தா சங்கரப்பா என்பவர் தன்னுடைய விவசாய நிலத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தண்ணீருக்காக 500 அடி ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளார். ஆனால் தண்ணீர் வராததால், அந்தக் கிணற்றை மூடாமல் அப்படியே விட்டுள்ளார். இந்தநிலையில், நேற்று மாலை குழந்தையின் தந்தை சதீஷ் விவசாய நிலத்திற்குத் தண்ணீர்விடச் சென்றுள்ளார். அப்போது அவரது குழந்தையும் பின்னால் சென்றுள்ளது. இதை சதீஷ் கவனிக்காமல் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்தக் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளது.

குழந்தையின் அழுகை சத்தத்தைக் கேட்டு சதீஷ் ஓடிவந்து பார்த்தபோது, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக தீயணைப்புத்துறையினர், மற்றும் மீட்புக் குழுவிற்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புக் குழு, மருத்துவக் குழுவினர் குழந்தையை மீட்கும் பணியைத் தொடங்கினர். அப்போது கயிறு மூலம் கேமரா விட்டுப் பார்த்த போது குழந்தை 20 அடியில் தலைகீழாகச் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கல்புருகி, குல்பர்கா ஆகிய பகுதிகளில் இருந்து மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் நேற்று மாலையிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆழ்துளைக் கிணறு அருகில் 5 அடி தூரத்தில் 2 ஹிட்டாச்சி மற்றும் 3 ஜேசிபிகளை கொண்டு 15 அடி குழி தோண்டி மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். 15 அடிக்குப் பிறகு அந்த பகுதியில் பெரிய பாறைகள் இருந்ததால் பணி தொய்வடைந்தது. இருந்தபோதும் நவீனத் தொழில்நுட்ப மூலம் மீட்புக் குழு தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க: RSS, சங்பரிவார், பாஜக நிர்வாகிகளுக்குச் சொந்தமான 62% சைனிக் பள்ளிகள்.. RTI மூலம் வெளியான தகவல்!

கர்நாடகா
உ.பி : 180 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு

இந்த நிலையில் இன்று காலை ஹைதராபாத்தில் இருந்து வந்த, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆழ்துளைக் கிணற்றில் கேமரா விட்டு குழந்தையை கண்காணித்து, குழந்தைக்குத் தேவையான ஆக்சிஜனும் வழங்கப்பட்டு வந்தது. ஆழ்துளை கிணற்றுக்குக் குறுக்கே 3 அடியில் துளையிட்டனர். அப்போது குழந்தை அழுது கொண்டிருந்த சத்தம் கேட்டது. இதையடுத்து மீட்புக் குழுவினர் கூடுதல் கவனம் செலுத்தி, குழந்தை மீது தூசி விழாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர் 20 மணி நேரத்திற்குப் பிறகு போராடி மீட்புக் குழுவினர் குழந்தையைப் பத்திரமாக உயிருடன் மீட்டனர். குழந்தை நன்றாக இருந்தது. 20 மணி நேரமாகப் பால், தண்ணீர் இன்றி குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் அங்கிருந்த மருத்துவக் குழுவினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கர்நாடகாவில் நடந்த ஆழ்துளை கிணறு விபத்துக்கள்

கடந்த 2000ஆம் ஆண்டு தவனகேரே மாவட்டத்தில் குழந்தை கரிய உயரிழப்பு

2007ஆம் ஆண்டு ராயச்சூர் மாவட்டத்தில் குழந்தை சந்தீப் உயிரிழப்பு

2014ஆம் ஆண்டு பாகல்கோட்டையில் ஆறு வயது குழந்தை திம்மன்னா, அதேபோல் விஜயபுரம் மாவட்டத்தில் நாகதான கிராமத்தில் பெண் குழந்தை அக்ஷதா உயிரிழப்பு

2017ஆம் ஆண்டு பேலகாவி மாவட்டம் அத்தனி கிராமத்தில் ஆறு வயது பெண் குழந்தை காவேரி உயிரிழப்பு. அதேபோல் கதக் மாவட்டத்தில் சவடி கிராமத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு

இதையும் படிக்க: ராஜஸ்தான் பாலியல் வழக்கு: விசாரணையில் பெண்ணிடம் ஆடையைக் கழற்றச் சொன்ன நீதிபதி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு!

கர்நாடகா
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு:பல மணி நேர போராட்டத்திற்கு பின் உடல் மீட்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com