\
ஒரேயொரு பயணிக்காக இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: பஞ்சாப் டூ துபாய் பறந்த தொழிலதிபர்

ஒரேயொரு பயணிக்காக இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: பஞ்சாப் டூ துபாய் பறந்த தொழிலதிபர்

ஒரேயொரு பயணிக்காக இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: பஞ்சாப் டூ துபாய் பறந்த தொழிலதிபர்
Published on: 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் தொழிலதிபர் ஒருவர் தன்னந்தனியாக துபாய்க்கு பறந்துள்ளார்.

எஸ்.பி.சிங் ஓபராய் என்ற தொழிலதிபர் விமானத்தில் ஏறியதும், தான் மட்டுமே இருப்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தார். முதலில் மகாராஜாவை போல உணர்ந்ததாக தெரிவித்த அவர், சக பயணிகள் இல்லாததால், பின்னர் தனக்கு சளிப்பு ஏற்பட்டதாக கூறினார்.

ஒருவர் மட்டுமே துபாய்க்கு செல்ல டிக்கெட் பெற்றதால் ஆரம்பத்தில், அவரது பயண டிக்கெட்டை ரத்து செய்ய ஏர் இந்தியா முடிவு செய்தது. ஆனால், மத்திய விமானப் போக்குவரத்து துறையின் தலையிட்டால், அவரை மட்டுமே அழைத்துக் கொண்டு ஏர் இந்தியா விமானம் துபாய் பறந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com