“பிராமணர்கள் பிரிவினைவாதிகள் அல்ல.. அகிம்சைவாதிகள்” - கேரள நீதிபதி பேச்சு

“பிராமணர்கள் பிரிவினைவாதிகள் அல்ல.. அகிம்சைவாதிகள்” - கேரள நீதிபதி பேச்சு
“பிராமணர்கள் பிரிவினைவாதிகள் அல்ல.. அகிம்சைவாதிகள்” - கேரள நீதிபதி பேச்சு

பிராமணர்கள் யார் என்பதற்கு கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி வி.சிதம்பரேஸ்  விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டு பிராமணர்களின் கூட்டம் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி வி.சிதம்பரேஸ் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பிராமணர்கள் யார்? என்ற கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதில், “பிராமணர்கள் என்பவர்கள் பூர்வ ஜென்ம சுக்ருதத்தால் இரண்டு முறை பிறப்பவர்கள். அவர்களுக்கு என்று ஒரு சிறப்பு அம்சங்கள் உள்ளன. அவை சுத்தமான பழக்க வழக்கம், சைவ உணவு முறை, கர்நாடக இசை மீது நாட்டம் ஆகியவை ஆகும். இந்த நல்ல குணங்கள் உடையவர்கள்தான் பிராமணர்கள். பிராமணர்கள் எப்போதும் பிரிவினையை ஆதரிக்க மாட்டார்கள். அவர்கள் எப்போதும் அகிம்சை வழியை கடைபிடிப்பவர்கள். 

ஒரு பிராமண சமையல் காரரின் மகன் பொருளாதாரத்தில் பின் தங்கியவராக இருந்தாலும் அவருக்கு இடஒதுக்கீடு கிடைக்காது. ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஏழை வியாபாரியன் மகனுக்கு இடஒதுக்கீடு கிடைக்கிறது. நான் ஒரு அரசியல் சாசன பதவியில் இருப்பதால் இடஒதுக்கீடு குறித்து கருத்து கூறவிரும்பவில்லை. 

ஆகவே, நீங்களே இந்த விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். இடஒதுக்கீடு விஷயத்தில் கேரள பிராமணர்கள் சங்கத்தின் தலைவர் கரிம்புலா ராமன் கூறியதுபோல ‘அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும்’ என்கிற வாசகம்தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. இதுபோன்ற விவகாரங்களில் ஒதுக்கப்படுவதை நாம் அனுமதிக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார். 

கடந்த 2011ஆம் ஆண்டு சிதம்பரேஸ் கேரளா உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com