\
தெருநாய்கள் கடித்து பலியான 8 வயது சிறுவன்

தெருநாய்கள் கடித்து பலியான 8 வயது சிறுவன்

தெருநாய்கள் கடித்து பலியான 8 வயது சிறுவன்
Published on: 

மகாராஷ்ரா சாலையில் தவறி விழுந்த சிறுவன் தெரு நாய்கள் கடித்ததால் உயிரிழந்தான்.

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி பகுதியில் 8 வயது சிறுவன், மற்றொரு சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்தான். விளையாட்டின் போது தடுமாறிய சிறுவன், சாலையில் படுத்திருந்த தெரு நாய்கள் மீது விழுந்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த நாய்கள், சிறுவனை ஒன்றுகூடி கடித்துள்ளன. பலத்த காயமடைந்த சிறுவன், வலி தாங்காமல் கதறியுள்ளான். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக அங்கு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் சாலையில் உள்ள நாய்களைப் பிடித்து காப்பகத்தில் அடைக்கவும் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com