இந்தியா
3676 அடி உயர செங்குத்தான மலை கோட்டை.. அசத்தலாக ஏறி 68 வயது மூதாட்டி சாகசம்!!
3676 அடி உயர செங்குத்தான மலை கோட்டை.. அசத்தலாக ஏறி 68 வயது மூதாட்டி சாகசம்!!
மகாராஷ்டிராவை சேர்ந்த 68 வயதான மூதாட்டி ஆஷா அம்பாதே 3676 அடி உயரம் கொண்ட செங்குத்தான ஹரிஹர் மலைக் கோட்டையின் மீதேறி சாகசம் புரிந்துள்ளார்.
அவர் அந்த மலை மீதேறிய காட்சிகள் வீடியோவாக ரெக்கார்ட் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த வீடியோ வைரலாக தெறிக்க விட்டு வருகின்றனர் நெட்டீசன்கள்.
மிகவும் குறுகலாக உள்ள ஹரிஹர் மலைக்கோட்டையின் செங்குத்து படிகளை வெள்ளை நிற புடவையை அணிந்திருந்த ஆஷா அம்பாதே சிரமமின்றி ஏறியுள்ளார்.
மலையின் உச்சியை அவர் அடைந்தவுடன் அங்கு குழுமியிருந்தவர்கள் கர ஒலி எழுப்பி அவருக்கு உற்சாகம் கொடுத்தனர்.
சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவை பரவலாக ஷேர் செய்து வருகின்றன இணைய பயன்பாட்டாளர்கள் .