\
இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
Published on: 

இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 120-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால் கொரோனாவை தடுக்கும் வகையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன. இதனிடையே கொரோனா பாதிப்பு காரணமாக கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பால் மும்பை கஸ்தூரிபா மருத்துவமனையில் 64 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com