கேரளாவில் அதிர்ச்சி! 5 நாட்களாக வாட்டிய பசிக்கொடுமையால் பூனையை பச்சையாக சாப்பிட்ட 27 வயது இளைஞர்!

5 நாட்களாக சாப்பிடாததால் பசியின் கொடுமை தாங்க முடியாமல் 27 வயது இளைஞர் ஒருவர் இறந்த பூனையை பச்சையாக சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
model image
model imagefreepik

கேரளாவின் குட்டிப்புரம் எனும் பகுதியில் இருக்கும் பேருந்து நிலையத்தில் அமர்ந்து 27 வயது இளைஞர் ஒருவர் நேற்று இறந்த பூனையை பச்சையாக சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவத்தை மக்கள் கண்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க, விரைந்து வந்த போலீஸார் அந்த இளைஞரை பிடித்து விசாரித்துள்ளனர்.

பேருந்து நிலையத்தின் படிக்கட்டில் அமர்ந்து பூனையை பச்சையாக சாப்பிட்டதாக கூறப்பட்ட நபரை பிடித்து விசாரித்த போது, அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், அவருக்கு 27 வயது ஆவதாகவும், 5 நாட்களாக ஒன்றுமே சாப்பிடாததால் இப்படி நடந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மாலை நேரத்தில் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

என்ன நடந்தது?

அசாம் மாநிலத்தின் வட கிழக்கு பகுதியைச்சேர்ந்த 27 வயது இளைஞரான அவர், வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கடந்த டிசம்பர் மாதம் கேரளாவிற்கு டிரெய்னில் புறப்பட்டுள்ளார். பின்னர் இங்கு வந்து கடந்த 5 நாட்களாக உண்ணுவதற்கு எந்த உணவும் கிடைக்காததால் பசியின் கொடுமையை தாங்கமுடியாமல் இறந்த பூனையை பச்சையாக சாப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பிடிஐ உடன் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், “எங்களுக்கு தகவல் கிடைத்ததும், நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றோம். அங்கு அவரிடம் விசாரித்தபோது, ​​அவர் கடந்த ஐந்து நாட்களாக உணவு எதுவும் சாப்பிடவில்லை என்று கூறினார். பின்னர் நாங்கள் வாங்கித்தந்த உணவை மறுக்காமல் வாங்கிகொண்டு சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவர் யாரிடமும் சொல்லாமல் தலைமறவாக சென்றுவிட்டார்” என தெரிவித்த அதிகாரி, அவரை பின்னர் தேடி கண்டுபிடித்ததாக கூறினார்.

மேலும் பேசிய அவர், இன்று காலை இளைஞன் உள்ளூர் ரயில் நிலையம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்த நிலையில் அவரை தேடிச்சென்றாம். அப்போது “சென்னையில் பணிபுரியும் அண்ணனின் அலைபேசி எண்ணை எங்களிடம் கொடுத்தார். அவரைத் தொடர்பு கொண்டு இவர் கூறும் தகவல் சரியானது தானா என்பதை உறுதி செய்தோம். பின்னர் அவரை திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தோம்.

முதற்கட்ட மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, அந்த நபருக்கு உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறிய அவர், உறவினர்கள் இங்கு வந்ததும் அவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com