ஜன்னலில் மாட்டிக் கொண்டு தொங்கிய 10 அடி நீள ராட்சத மலைப்பாம்பு! ரிஸ்க் எடுத்து காப்பாற்றிய இளைஞர்கள்

தானேவில் மக்கள் குடியிருப்பு பகுதியொன்றில் ஜன்னலில் மாட்டி 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தொங்கிக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மலைப்பாம்பு
மலைப்பாம்புweb

மஹாராஷ்டிராவின் தானேவில் இருக்கும் குடியிருப்பு பகுதியொன்றில் ராட்சத மலைப்பாம்பு ஒன்றை இளைஞர்கள் இருவர் மீட்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், குடியிருப்பு கட்டிடத்தில் இரும்பு கம்பிகளை உடைய ஜன்னல் ஒன்றில் சுமார் 10 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு வீட்டிற்குள் செல்ல முயற்சித்து மாட்டிக்கொண்டு தொங்குகிறது. வீட்டிற்குள் செல்ல முடியாதபடியும், வெளியே வரமுடியாதபடியும் மாட்டிக்கொண்ட மலைப்பாம்பை இரண்டு இளைஞர்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இருவரும் பாம்பை பத்திரமாக மீட்கும் பொருட்டு வீட்டிற்குள்ளே தள்ள முயற்சிக்கின்றனர். ஒருவர் ஜன்னலுக்கு உள்ளே நின்று பாம்பின் தலைப்பகுதியை பிடித்து உள்ளே இழுக்க முயற்சி செய்கிறார். ஜன்னலுக்கு வெளியே தொங்கிகொண்டிருக்கும் இன்னொரு இளைஞர் பாம்பின் வாலை பிடித்து தள்ளுகிறார். பின்னர் பாம்பை உள்ளே தள்ளும் முயற்சி முடியாததால் பாம்பை வெளிப்பக்கமாக தள்ள முயற்சித்து அதனை மீட்கின்றனர். இந்த சம்பவம் தானேவில் நவுபாடா பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது.

அரிய வகை அல்பினோ பர்மிய மலைப்பாம்பு!

காணொளியில் காணப்பட்ட ராட்சத பாம்பின் இனமானது அல்பினோ பர்மிய மலைப்பாம்பு எனவும், விசத்தன்மையற்றது எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அல்பினோ பர்மிஸ் என்பது ஒரு அரிய வகை பர்மிய மலைப்பாம்பு ஆகும். இவை பொதுவாக காடுகளில் அடர் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. அல்பினிசம் என்பது டிஎன்ஏவில் ஏற்படும் ஒரு மரபணு மாற்றமாகும், அது உடலில் நிறமியை உற்பத்தி செய்வதை தடுக்கிறது. இதன் விளைவாகவே அல்பினோ பர்மிய மலைப்பாம்பானது வெள்ளை தோலை பெருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com