இந்தியாவில் வெள்ளத்தால் இதுவரை 993 பேர் உயிரிழப்பு: தொடரும் சோகம் !

இந்தியாவில் வெள்ளத்தால் இதுவரை 993 பேர் உயிரிழப்பு: தொடரும் சோகம் !

இந்தியாவில் வெள்ளத்தால் இதுவரை 993 பேர் உயிரிழப்பு: தொடரும் சோகம் !
Published on

கேரளா வெள்ளம் இந்தாண்டு இந்தியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய இயற்கை பேரழிவாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் இந்தாண்டு இதுவரை 993 பேர் வெள்ளத்தால் உயிரிழந்துள்ளதாக தேசியப் பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. இந்தக் கணக்கு இதுவரை நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த எண்ணிக்கை உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 400 பேர் பெருமழை வெள்ள பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதற்கடுத்தபடியாக உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 204 பேர் வெள்ள பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இப்படியொரு பேரிடர் வரும் என கேரள மக்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். பெருமழையில் மிகப்பெரிய வீடுகளும் சரிந்து விழுந்த காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்தது. மீளாத் துயரில் சிக்கிக் கொண்ட கேரள மக்களை காக்க பல்வேறு தரப்பினரும் தங்களது கரங்களை நீட்டினார்கள். கேரள மக்களும் தங்களை தாங்களே காத்துக் கொள்ள களத்தில் இறங்கினார்கள். தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மீட்பு பணிகளில் மும்மரமாக ஈடுபட்டனர். 

கேரள மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இடுக்கி மாவட்டத்தில் மட்டும் 51 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 10 பேரை காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. திருச்சூரில் 43 பேர், எர்ணாகுளத்தில் 38 பேர், ஆலப்புழாவில் 34 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெள்ளத்தில் முக்கிய சான்றிதழ்களையும் ஆவணங்களையும் இழந்தவர்களுக்கு மீண்டும் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசு கூறியுள்ளது. இதற்காக மென்பொருளை உருவாக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் இந்தாண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை இந்தாண்டு கேரளா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் அஸாம் மாநிலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சம் பேர் இன்னமும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 387 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 204 பேரும், மேற்கு வங்கத்தில் 195 பேரும், கர்நாடகாவில் 161 பேரும், அஸாமில் 46 பேரும் வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட மழை வெள்ள பாதிப்பால் 1200 பேர் உயிரிழந்ததாக தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது. மேலும் 2005 ஆம் ஆண்டு முதல் சராசரியாக ஆண்டுக்கு 1600 பேர் உயிரிழந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்று வெள்ள பாதிப்புகளால் அதிகப்படியான உயிரிழ்ப்புகள் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் மகராஷ்டரா மாநிலங்களில் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற பாதிப்புகளால் ஆண்டுக்கு ரூ. 4745 கோடி மதிப்பிலான பொதுச் சொத்துகள் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com