கல்வி கற்க வயது தடையில்லை என்பதை கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி நிரூபித்துள்ளார்.
கேரளாவில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட பயிற்சியை முடித்த 96 வயது கார்த்தியானி அம்மாள், செப்பாட் என்ற இடத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நடந்த தேர்வை எழுதினார். கேரளாவின் பல இடங்களில் நடந்த தேர்வில் பங்கேற்ற 40 ஆயிரத்து 440 பேரில் கார்த்தியானி அம்மாள்தான் மிக வயதான மாணவியாவார்.
சிறையில் இருந்தபடி படித்து வந்த 8 கைதிகளும் தேர்வெழுதினார்கள். கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக கடந்த 6 மாதத்துக்கு முன், அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் சேர்ந்ததாக கார்த்தியானி அம்மாள் தெரிவித்தார்.